சாலை விபத்தில் பலியான திருச்சி ஆயுதப்படை காவலர்..
சாலை விபத்தில் பலியான திருச்சி ஆயுதப்படை காவலர்..
திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா அருண். இவர் திருச்சி மாவட்ட ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இன்று 01/06/2021 மதியம் பணிக்காக துவாக்குடி காவல் நிலையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீர் மயக்கம் ஏற்பட்டதில் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கினார்.
மேலும் தலையில் பலத்த காயத்துடன் கிடந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
–ஜித்தன்