திருச்சி ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையே தகராறு…

0

திருச்சி ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையே தகராறு…

திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் நேற்று 31/05/2021 இரவு 11 மணி அளவில் பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் விதமாக ஜங்ஷன் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் தகராறில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலகட்டத்தில் ரயில்களின் சேவை முழுவதுமாக குறைக்கப்பட்டு வந்த நிலையில் பயணிகளின் பயணம் என்பது மிகக் குறைவாகவே இருந்து வருகிறது இந்நிலையில் தமிழக அரசு கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பேருந்து வாகன போக்குவரத்து சேவைகளை முழுவதுமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அரசு பாஸ் அனுமதி பெற்று வெளியில் பயணம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணியை யார் ஏற்றுவது எவ்வளவு சவாரிக்கு ஏற்றுவது என்ற தகராறு ஏற்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேசிக் கொண்டதால் ரயிலுக்கு காத்திருந்த பயணிகளுக்கு பெரும் இடையூறாக இறந்ததாக சுற்றுவட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

-ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.