கோவில்னா இப்படித்தான் இருக்கனும் ? எங்கே தெரியுமா ?
ஐயப்பன் கோவிலில் செருப்பு கண்ட இடத்தில் கழட்டி விட அனுமதி இல்லை அதற்க்கான இடத்தில் தான் விட்டு டோக்கன் பெற்று செல்ல முடியும். பெண்களுக்கு ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு.. முறையான உடை இல்லை என்றால் அவர்களே துப்பாட்டா வழங்குகின்றனர். தலை முடி விரித்து போட்டு சென்றால் கட்டி கொள்ள பேண்ட் ..
ஆண்கள் அரைகால் டவுசர் பெண்கள் டிசர்ட் அனுமதி இல்லை. செல்போன் அனுமதி இல்லை. மீறி பேசினால் ஆயிரம் அபராதம் கைபேசி கோவில் நடை சாத்திய பிறகே திருப்பி வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு ஆன்மீக வகுப்புகள். பெரியவர்களுக்கு யோகா வகுப்பு. குறைந்த கட்டணத்தில் பக்தி சுற்றுலா மாதம் தோறும் இரு முறை ரத்ததான முகாம். அதிக மதிப்பெண் பெற்று கல்வியை தொடர இயலாதவர்களுக்கு கல்வி உதவி தொகை. கோடைகாலத்தில் நல்லவர்கள் உதவியுடன் நீர் மோர் தானம்.
ஆங்கில வருடபிறப்பு முதல் நாள் தரிசனம் அன்று அனைவருக்கும் சுவாமி முன் வைக்கப்பட்ட நாணயம் வழங்கபடுகிறது. தினமும் பிரசாத விநியோகம்.
உங்கள் தாயும் தெய்வம் தான் என தாயை வணங்க இடம் அங்கே அம்மா என்றழைக்காத பாடல் கல்வெட்டில் செதுக்கப்பட்டு வணங்க ஏற்பாடு.( முன்பு பாடலாக பாடி கொண்டிருந்த்து தற்போது இல்லை) மூலிகை பூங்கா அதில் நன்னெறி வாசகங்கள்.
தியானம் பழக தனி இடம். தட்டில் காசு போட தேவையில்லை. கண்ட இடங்களில் தீபம் ஏற்ற முடியாது. சத்தமாக பேசவோ சத்தமாக பேசவோ கூட்டமாக பேசவோ அனுமதி இல்லை..
பக்தர்கள் குளிக்கவும் வசதி உண்டு. சுத்தமான கழிவறை வசதியும் உண்டு. அமைதி மட்டுமே பிரதானம்..
பக்தர்களை யாரும் விரட்டமாட்டார்கள் உங்களை கட்டுபடுத்த வரிசையில் செல்ல ஒற்றை நூல் மட்டுமே..
கோவில்னா இப்படி தான் இருக்கனும்.. இப்படிதான் இங்க இருக்கும் என பாடம் எடுக்கும் கோவில் திருச்சி ஐயப்பன் கோவில்.
— சுவாமியே சரணம் ஐயப்பா.