திருச்சியில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் போட்டி வேட்பாளர்கள் இரவு பகலாக நீளும் பஞ்சாயத்துகள் !
திருச்சியில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் போட்டி வேட்பாளர்கள் இரவு பகலாக நீளும் பஞ்சாயத்துகள் !
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் தி.மு.க. மட்டும் 51 வார்டுகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் , அதாவது வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளில்தான் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 வார்டு வேட்பாளர்கள் யார்? என்பதை தெரிய முடிந்தது. அதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த பின்னரே தெரியவந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்குள் ரகசியம் காக்கப்பட்டு வந்தது.
களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய தொண்டர்களுக்கு தெரியாது அதில் காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி கொடுத்த பி பார்ம் விண்ணப்பத்தில் இரண்டு பேரை நீக்கி விட்டு திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மாற்றிக்கொடுத்து விட்டார் என்கிற குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 வார்டுகள் வீதம் ஒதுக்கப்பட்டன. மனிதநேய மக்கள் கட்சி ஒரு வார்டில் போட்டியிடுகிறது.
மேலும் தி.மு.க.வில் எதிர்பார்ப்பில் இருந்த பல நிர்வாகிகளுக்கு `சீட்’ கிடைக்கவில்லை. இதனால், ஏமாற்றத்தில் இருந்த அவர்கள், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான 04, 05, ஆகிய தேதிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு போட்டியாக சுயேட்சையாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து களம் இறங்கினர். இது தி.மு.க. வேட்பாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
12-வது வார்டில் தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளர் வக்கீல் பன்னீர் செல்வத்திற்கு போட்டியாக தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் பாலமுருகன் களம் இறங்கி உள்ளார்.
14-வது வார்டில் திருமாவளவனை எதிர்த்து முன்னாள் கவுன்சிலர் வேலு
15-வது வார்டில் தங்கலெட்சுமியை எதிர்த்து விஜயா.
46-வது வார்டில் ரமேசை எதிர்த்து முன்னாள் கவுன்சிலர் உஷாராணி
54-வது வார்டில் வட்ட செயலாளர் புஷ்பராஜை எதிர்த்து முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி
62-வது வார்டில் சுபாவை எதிர்த்து கவிதா
17-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பிரபாகரனுக்கு எதிராக தி.மு.க. வட்ட செயலாளர் மனோகரன்
29 -வது திமுக வேட்பாளர் கமால் முஸ்தபாவை எதிர்த்து தொடர்ந்து அதே வார்டில் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் முன்னாள் கவுன்சிலர் சையது இப்ராகிம்
39-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரெக்சுக்கு எதிராக தி.மு.க. நிர்வாகி மணிமாறன்
24- வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் ஆதரவாளர் பேட்ரிக் ராஜ்குமார் சோபியவிமலாராணி எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயப்பிரியா
51-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வி கருப்பையாவுக்கு எதிராக காங்கிரஸ் மகளிர் அணி நிர்வாகி ஜெகதீஸ்வரி
53-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஹேமா
65-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரன்
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்தவர்களே சுயேட்சையாக களம் இறங்கியது அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கி உள்ளது.
07.02.2022 அன்று வேட்பு மனுக்களை திரும்ப பெற வைப்பதற்கு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் இரவு பகலாக பஞ்சாயத்து நீடித்து கொண்டு இருக்கிறது… .