திருச்சி கவுன்சிலர் மகள் தற்கொலை !
திருச்சி கவுன்சிலர் மகள் தற்கொலை !
திருச்சியில் பெண் கவுன்சிலர் மகள் தற்கொலை செய்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சியில் திமுக கவுன்சிலராக இருந்தவர் லீலா .இவர் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
அவரது மகள் பாண்டி செல்வி அவருக்கு ராஜா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சங்கிலியாண்டபுரம் வீட்டில் வசித்து வந்த பாண்டிசெல்வி இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலக்கரை போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . கடந்த 3 ஆண்டுகளாக ராஜா வீட்டில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
திருமணம் ஆன பாண்டிசெல்வி அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இந்த நிலையில் பாண்டிசெல்வி ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வரும் படி பிரச்சனை செய்திருக்கிறார். அதை அறிந்த ஆட்டோ டிரைவரின் சகோதரர்கள் பாண்டிசெல்வியை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அன்றைய இரவு தான் தற்கொலை செய்துள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பாண்டி செல்வி தற்கொலை குறித்து காரணத்தை போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு லீலாவின் மகன் மீது திருட்டு வழக்கு சம்மந்தமாக போலிசார் விசாரித்து வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.