தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் நுண்கலை மன்ற துவக்க விழா
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( 6.8.2025 ) நடைபெற்ற நுண்கலை மன்றமும், IQAC இணைந்து நடத்திய, நுண்கலை மன்ற துவக்க விழா கல்லூரி முதல்வர். முனைவர். க.அங்கம்மாள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்திணராக பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர். குபேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழ் துறை தலைவர் முனைவர் க. வாசுதேவன், பொருளியல் துறை தலைவர். கோபாலகிருஷ்ணன் மற்றும் IQAC பொறுப்பாளர் க. தணிகாச்சலாம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வேதியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ. ஜான் அமல் ராஜ் வரவேற்புரை வழங்கினார். வேதியல் துறை இணை பேராசிரியர் பிரகதீஸ்வரன் நன்றி கூறினார். இயற்பியல் துறை இணை பேராசிரியர் தெய்வமலர் விழாவினை தொகுத்து வழங்கினார். இறுதியாக நுண் கலை மன்ற மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.