அழிந்து போன பாஸ்கா இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஒளி-ஒலி காட்சியாய் நாடக வடிவில் தந்த பங்குதந்தைக்கு பொன்விழா பிறந்தநாள்
அழிந்து போன பாஸ்கா இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஒளி-ஒலி காட்சியாய் நாடக வடிவில் தந்த பங்குதந்தைக்கு பொன்விழா பிறந்தநாள்
திருச்சி மறைமாவட்டம் வட்டார அதிபரும், கிராப்பட்டி பங்கின் பங்குத்தந்தை அருள் தந்தை ஜோசப் லாரன்ஸ் அவர்கள் தனது 50வது பிறந்தநாளை பொன்விழா ஆண்டாக இன்று (19.03.2022)சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார் .
இதுவரை தான் நடந்து வந்த பயணத்தில் தனக்கு துணையாக வந்த எல்லா நண்பர்களையும் நினைத்துப் பார்த்து அவர்களை அழைத்து இன்று நன்றி திருப்பலி ஒன்றை அவர் ஒப்புக்கொடுத்தார். இந்தப் பண்பு அனைவருக்கும் மன மகிழ்ச்சியை கொடுத்தது.
அழிந்துபோன பாஸ்கா இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஒளி-ஒலி காட்சியாய் நாடக வடிவில் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் நவீன வடிவத்தில் அரங்கேற்றிய பெருமைக்குரிய குருவாய், இளைஞர்களை தட்டி எழுப்பக்கூடிய தோழமை மிக்க நண்பனாய் ,அருள் தந்தை ஜோசப் லாரன்ஸ் செயல்படுவது கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு திருச்சி மாவட்டத்தை பொருத்தமட்டில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது .
50வது பொன்விழா பிறந்தநாள் காணும் அருள் தந்தைக்கு நமது அங்குசம் நாளிதழின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.