அமைச்சரை பகைத்த எம்எல்ஏ திமுகவில் சலசலப்பு…

ஜெ.டி.ஆர்.

0

 

அமைச்சரை பகைத்த எம்எல்ஏ திமுகவில் சலசலப்பு…

 

2 dhanalakshmi joseph

திமுகவின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கும் அந்த அமைச்சரின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த கோயில் தொகுதி எம்எல்ஏ ஒருவருக்கு மான சண்டை மாவட்டத்தைக் கடந்து அண்ணா அறிவாலய வட்டாரத்தில் மிகப்பெரிய புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுகவின் முக்கிய அமைச்சராகவும் கட்சியிலும் முக்கிய அதிகார மையமாகவும் விளங்கி வரும் அந்த மூத்த அமைச்சர் மாவட்டம் முழுவதும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.

- Advertisement -

- Advertisement -

அதே மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது தொகுதிக்குள் நடைபெற்ற பெரிய தொகை கொண்ட காண்ட்ராக்ட் ஒன்றை தனக்கு நெருக்கமான நபருக்கு வழங்கியிருக்கிறார். இது பற்றி தெரியாத அமைச்சரின் மகன், தன்னை தேடி உதவி கேட்டு வந்த உடன்பிறப்புக்கு போன் மூலமாகவே அந்த டெண்டரை பெற்றுத் தந்திருக்கிறார்.

4 bismi svs

இதனால் கோபமடைந்த எம்எல்ஏ அமைச்சரின் மகனுக்கு போன் செய்து “இதுவரை தேர்தலுக்காக பல கோடி ரூபாய் செலவு பண்ணி இருக்கேன், இன்னும் எம்எல்ஏவாக இருக்கக்கூடிய நாலு வருஷத்துக்கு செலவு செய்ய இன்னும் பல கோடி வேணும், எல்லாத்தையும் செலவு மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்தா நாங்க எங்க போக இல்லாட்டி அடுத்த நாலு வருஷத்துக்கு எனக்கு செலவு செய்ய 20சி கொடுத்துருங்க, நான் பாட்டுக்கு என் வேலையை பார்க்குறேன்.

நீங்க சொல்ற இடத்துல எல்லாம் கையெழுத்து போடுறேன்” என்று கூறியதோடு சில கெட்ட வார்த்தைகளையும் கூறியுள்ளார் அந்த எம்எல்ஏ.


இந்தச் செய்தி அமைச்சரின் காதுக்கு போக, அமைச்சர் உடனே எம்எல்ஏவுக்கு போன் போடச் சொல்லி இருக்கிறார். அமைச்சரின் உதவியாளரும் தொடர்ந்து பலமுறை எம்எல்ஏவிற்கு போன் அடித்தும் போன் அழைப்பை ஏற்காமல் புறக்கணித்து பின்னர் ஒருவழியாக போனை அட்டன் செய்திருக்கிறார்.

போனை எடுத்த எம்எல்ஏ.விடம் “என்னடா எனக்கு உரிமை இல்லையா, என்ன நடந்துச்சுன்னு இப்படி பேசியிருக்க” என்று அமைச்சர் கேட்க. “இல்லண்ணே, நான் பேசி முடித்த காண்ட்ராக்டுல தலையிட்டு மாத்துனா எப்படிணே, என் சாதிக்காரன் என்னை என்ன நினைப்பான்” என எம்எல்ஏ கூற…. “சரி.. இனி உன் தொகுதியில் 4 வருஷம் எந்தத் தலையீடும் நான் செய்ய மாட்டேன்” என்று சொல்லி போனை கட் செய்து விட்டாராம் அமைச்சர்.

மேலும் தனது மகனை அழைத்து தலையீடுகளை குறைத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கியிருக்கிறாராம். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. செய்யும் சிறிய விஷயங்களுக்கும் அமைச்சர் எதிர்வினையை கொடுத்து வருகிறாராம்.

 

இதனால் எம்எல்ஏ ‘ நாம ரொம்ப பேசிட்டோமோ… என அப்செட்டில் இருக்கிறாராம்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.