அம்பானி வீட்டு கல்யாணத்தில் திருச்சி ராம்ஜிநகர் கொள்ளையர்கள் !

இவ்வளவு செலவு பண்ணி வந்து வெறும்கையோடவா திரும்புறதுனு ராஜ்கோட் ஏரியா பக்கம் ரோட்டோரமா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து ...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அம்பானி வீட்டு கல்யாணத்தில் கைவரிசை காட்ட சென்ற திருச்சி ராம்ஜிநகர் கொள்ளையர்கள் !

தொழிலதிபர் அம்பானி வீட்டு திருமணத்தில் கை வரிசையைக் காட்ட சென்ற திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்த கொள்ளையர்கள், ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம் ஆகிய ஐந்து பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட போலீசார் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மணப்பாறை முறுக்கு, திண்டுக்கல் பூட்டு கதையாக திருட்டுக்கு பெயர் போன ஏரியா, திருச்சி ராம்ஜிநகர். வேட்டைக்கு கிளம்புவதைப் போல, குல சாமியை கும்பிட்டுவிட்டு கும்பலாக ரயிலேறி வடமாநிலங்களுக்குச் சென்று கைவரிசையைக் காட்டிவிட்டு தப்பிவிடுவது வழக்கம். பிளைட் பிடித்து திருட செல்லும் ஹைடெக் களவாணிகளும் இதில் அடக்கம்.

இதே பாணியில், தொழிலதிபர் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கைவரிசையைக் காட்ட கிளம்பி, டைட்டான போலீஸ் பாதுகாப்பை மீறி அது முடியாமல் போக, இவ்வளவு செலவு பண்ணி வந்து வெறும்கையோடவா திரும்புறதுனு ராஜ்கோட் ஏரியா பக்கம் ரோட்டோரமா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப்பை லவட்டிக் கொண்டு திரும்பியிருக்கிறார்கள்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

டெல்லியில் கைதாகியிருக்கும் ராம்ஜிநகர் கொள்ளையர்கள்.

கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த லோக்கல் போலீசார், டெல்லியில் வைத்தே ஐவரையும் அலேக்காக தட்டி தூக்கியிருக்கிறார்கள்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இது குறித்து ராஜ்கோட் காவல் கண்காணிப்பாளர் ராஜு பார்கவ், அவர்கள் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தமிழ்நாட்டில், திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருடலாம் என்ற நோக்கத்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஜாம்நகர் சென்று பார்த்த போது அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக இருந்ததால், அங்கு திருடும் திட்டத்தை கைவிட்டுவிட்டு ஜாம்நகர் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப்பை திருடினர்.

பின்னர் அங்கிருந்து ராஜ்கோட் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மெர்சிடிஸ் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ. 10 லட்சம் பணம் மற்றும் லேப்டாப்பை திருடினர். அதனை தொடர்ந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். இக்கொள்ளை கூட்டத்திற்கு மதுசூதன் தான் தலைவனாக விளங்கியுள்ளான். அவன் தற்போது தலைமறைவாக இருக்கிறான். அவன் தான் எங்கு திருடவேண்டும் என்பதை முடிவு செய்வான்.

(இடமிருந்து வலமாக) : ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம்.

மேலும் இக்கும்பல் முக்கிய நகரங்களுக்கு ரயிலில் சென்று கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார் கண்ணாடியை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்திக்கிறார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த நான்கு மாதத்தில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லி என 11 இடங்களில் திருடி இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்” என்கிறார், காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜு பார்கவ்.

மேற்படி கும்பல் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவிலும் தனது வேலையை காட்டி இருப்பதாக தகவல் தெரியவந்திருப்பதாக, திருச்சி மாவட்ட போலீசார் தெரிவிக்கின்றனர்.

  • அங்குசம் செய்திப் பிரிவு.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.