உதவிப்பேராசிரியர்கள் நியமன அறிவிப்பில் பாரபட்சம் ! அரசுக்கு கோரிக்கை விடுக்கும் விரிவுரையாளர்கள் !
பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களுக்கும் மற்றும் அனைத்துக்கல்லூரி பேராசிரியர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாகவுள்ள 4000 உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணைசமீபத்தில் TRB வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பில், அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு மட்டும் Weightage மதிப்பெண்கள் கொடுக்கபட்டிருப்பதாகவும்; இதனால் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களுக்கும் மற்றும் அனைத்துக்கல்லூரி பேராசிரியர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்திருந்திருக்கிறது.
மேற்படி, TRB அறிவிப்பாணையில் உள்ள குறையை சுட்டிக்காட்டும் விதமாக, அனைத்துக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருச்சி கல்லூரி கல்வி இணை இயக்குநர் அவர்களிடம் கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
மார்ச்-18 அன்று பிற்பகல் 2.30 மணி அளவில், திருச்சி மன்னார்புரம் ஜமால் முகமது கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் முறையிடும் இந்த நிகழ்வில், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களும், அனைத்துக்கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்பார்கள் என்பதாக தெரிவிக்கிறார், அனைத்துக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேரா. முனைவர் எஸ். தமிழரசன்.
அங்குசம் செய்திப் பிரிவு.