அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உலகை திரும்பிப்பார்க்க வைத்த திருச்சி விஞ்ஞானி !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

உலகளாவிய அளவில் சிறந்த 5% விஞ்ஞானிகளில் ஒருவராக SciRank Global தரவரிசையின்படி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார், திருச்சியை சேர்ந்த பேராசிரியர் முனைவர் கணேசன் சிவானந்தன்.

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் (DSU) ஆராய்ச்சி மையத்தில் உதவிப்பேராசிரியராகவும் ஆராய்ச்சி விஞ்ஞானியாகவும் பணியாற்றும் முனைவர் கணேசன் சிவானந்தன் தாவர உயிரித் தொழில் நுட்பம், மூலக்கூறு மரபியல் மற்றும் வேளாண் புத்தாக்கம் ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த உலகளாவிய பெருமைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

முன்னோடி ஆராய்ச்சி :

ஏறக்குறைய இரண்டு தசாப்தகால ஆராய்ச்சி அனுபவத்துடன், முனைவர் சிவானந்தன் CRISPR/Cas9 மரபணுத்திருத்தம், தாவர மரபணு உருமாற்றம், மூலக்கூறு உயிரியல், தாவரத்திசு வளர்ப்பு, வளர்சிதை மாற்றப் பொறியியல் மற்றும் செயல்பாட்டு மரபணுவியல் ஆகிய துறைகளில் ஒரு முன்னணி விஞ்ஞானியாகத் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். அவரது முன்னோடி ஆராய்ச்சி, பயிர்மேம்பாடு, பிராசிகா பயிர்களில் பூப்பதை விரைவுபடுத்துதல், மதிப்புமிக்க மருத்துவச் சேர்மங்களின் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நிலையான வேளாண் உயிரித்தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இப்போது என்றில்லை. இதற்குமுன்னர் முனைவர் கணேசன் சிவானந்தனின் அறிவியல் சாதனைகள் பல சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. ஜூன் 2026 நிலவரப்படி, அவர் 2,214-க்கும் மேற்பட்ட மேற்கோள்களுடன் (citations) 23 என்ற Scopus h-குறியீட்டையும், 2,965-க்கும் மேற்பட்ட மேற்கோள்களுடன் 25 என்ற Google Scholar h-குறியீட்டையும் பெற்றிருக்கிறார். இதுவரையில் சர்வதேச அளவிளான 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். நான்கு புத்தக அத்தியாயங்களை எழுதி முடித்திருக்கிறார். தாவர உயிரித் தொழில் நுட்பத்தில் ஒருசர்வதேச காப்புரிமையையும் பெற்றிருக்கிறார் என்பதெல்லாம் இவரது துறை சார்ந்த ஈடுபாட்டுக்கான துலக்கமான சான்றுகளாக அமைந்திருக்கின்றன.

கணேசன் சிவானந்தன்
கணேசன் சிவானந்தன்

சர்வதேச ஆய்வுக்கட்டுரைகள்:

மேலும், மொத்தம் 141-க்கும் அதிகமான ஆய்விதழ் தாக்கக் காரணியைக் (journal impact factor) கொண்டுள்ளார். இவரதுஆய்வுகள் Frontiers in Plant Science, *PLOS ONE, Industrial Crops and Products, *Plant Physiology and Biochemistry, Annals of Botany, Protoplasma, Plant Cell Tissue and Organ Culture மற்றும் Materials Research Bulletin உள்ளிட்ட மதிப்புமிக்க சர்வதேச ஆய்விதழ்களில் இடம் பெற்றுள்ளன. இவரது குறிப்பிடத்தக்க அறிவியல் பங்களிப்புகளில், பிராசிகா வகைப் பயிர்களில் CRISPR/Cas9 அடிப்படையிலான மரபணுத்திருத்த உத்திகளை உருவாக்குதல், இலக்கு வைக்கப்பட்ட மரபணுத்திருத்தம் மூலம் முன்கூட்டியே பூக்கும் சீனமுட்டைக்கோஸை (Chinese cabbage) உருவாக்குதல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களில் மரபணு மாற்றம் மற்றும் மறுஉருவாக்க அமைப்புகளை மேம்படுத்துதல், மற்றும் மேம்பட்ட உயிரித் தொழில்நுட்ப அணுகுமுறைகள் மூலம் வித்தானோலைடுகள் (withanolides), குளுக்கோசினோலேட்டுகள் (glucosinolates), போடோஃபில்லோடாக்சின் (podophyllotoxin), L-டோபா (L-Dopa), ஐசோஃப்ளேவோன்கள் (isoflavones) மற்றும்வைட்டமின் E போன்ற மதிப்பு மிக்க தாவர வேதிப்பொருட்களின் (phytochemicals) உற்பத்தியைஅதிகரித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

திருச்சிக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானி :

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் – உயிரித்தொழில்நுட்பம் (பல்வேறுதுறைகளை உள்ளடக்கியது) பிரிவில்முனைவர்பட்டம் (Ph.D.) பெற்றிருக்கிறார். தாவரவியலில் முதுகலை (M.Sc.) மற்றும் இளங்கலை (B.Sc.) ஆகிய இரண்டிலும் ‘முதல் வகுப்பு மற்றும் சிறப்புத் தேர்ச்சி’ (Distinction) பெற்றதோடு, பல்கலைக்கழக அளவில் முதலிடம் மற்றும் தங்கப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார். தனது கல்விப் பயணத்தில், சிறப்பான கல்விச்சாதனைகளுக்காகத் தங்கப்பதக்கம், தகுதிச்சான்றிதழ்கள் மற்றும் கல்விசார் சிறப்புவிருதுகள் எனப் பல கௌரவங்களைப் பெற்றிருக்கிறார்.

உலகை தன்வயப்படுத்திய விஞ்ஞானி :

இதுதவிர, முனைவர் கணேசன் சிவானந்தன் பலமதிப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச ஃபெலோஷிப் மற்றும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவருக்கு தென்கொரியா அரசாங்கத்தால், மிகவும் போட்டித் தன்மைவாய்ந்த கொரியா ஆராய்ச்சி பெல்லோஷிப் (KRF), CSIR மூத்த ஆராய்ச்சி பெல்லோஷிப், DBT மூத்த ஆராய்ச்சி பெல்லோஷிப் மற்றும் இந்திய அரசாங்கத்தின் DST-SERB தேசிய போஸ்ட்-டாக்டோரல் பெல்லோஷிப் வழங்கப்பட்டிருக்கிறது. தென்கொரியா, இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பதவிகளை வகித்து முதுகலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார். கொரிய அறிவுசார் சொத்து அலுவலகம் (KIPO) வழங்கிய சர்வதேசகாப்புரிமை, Elsevier மற்றும் Springer Nature வழங்கும் அங்கீகாரம் பெற்ற மதிப்பாய்வாளர் விருதுகள் ஆகியவற்றை பெற்றிருக்கிறார்.
மெட்டீரியல்ஸ்டுடேயின் சிறந்த கட்டுரையாக அவரது வெளியீடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. தற்போது BMC தாவர உயிரியலின் ஆசிரியர்குழு உறுப்பினராகவும், 3 பயோடெக் (Springer) இன் இணை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்று …

உலகளாவிய அளவில் சிறந்த 5% விஞ்ஞானிகளில் ஒருவராக தடம்பதித்திருக்கும் முனைவர் கணேசன் சிவானந்தன் கடந்து வந்த பாதை முன்னுதாரணமானது. இந்த அங்கீகாரம் முனைவர் கணேசன் சிவானந்தனின் சிறப்பான கல்விப்பயணத்தின் பிரதிபலிப்பாகவும் அமைந்திருக்கிறது.
இவரைப் போன்று ஆராய்ச்சி துறையில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கக்கூடியது. ஆம், இன்று உலகை தன்வயப்படுத்தியிருக்கும் விஞ்ஞானி கணேசன் சிவானந்தன் எளிய குடும்ப பின்னணியை சேர்ந்தவர். கிராமப்புறப்பின்னணியிலிருந்து வந்த இவர், தனது கல்விப்பயணம் முழுவதும் தொடர்ந்து சிறப்பான இடங்களைப் பிடித்து உயர்ந்திருக்கிறார்.

அரசுப்பள்ளியில் அதுவும் தமிழ்வழியில் பயின்றவர். விளையும்பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, மேல்நிலைக் கல்வி மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) ஆகிய இருதேர்வுகளிலும் இவர் முதலிடம் பிடித்திருந்தார் என்பதும்; திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதெல்லாம் மயிர்கூச்சரிய வைக்கின்றன.

– இளங்கதிர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.