திருச்சிக்கு பெருமை சேர்த்த ‘செவாலியர்’அலெக்ஸ்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிக்கு பெருமை சேர்த்த ‘செவாலியர்’அலெக்ஸ் – சாதாரண மனிதன் விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் மேற்கொண்டால் எட்ட முடியாத உயரங்களையும் எட்டலாம் என்பதற்கு நாம் வாழும் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மாமனிதன் அலெக்ஸ் ஓர் உன்னத சாட்சி.  அவர் இம்மண்ணை விட்டுப் பிரிந்து ஆண்டுகள்  கடந்தாலும் மறையாது திருச்சியின் அவரின் சாதனையும், அடையாளமும்..!

திருச்சி அடையாளம்
திருச்சி அடையாளம்

Frontline hospital Trichy

எளிய குடும்பத்தில் தந்தை அடைக்கலம், தாய் செல்லக்கண்ணு அம்மாளின் மகனாய்  1959 ஆண்டு பிறந்து திருச்சி, பொன்னையா மேல்நிலைப்பள்ளியில் பயின்றவர். தன் பள்ளிப் படிப்பு நாட்களிலேயே துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அன்றைய அணு விஞ்ஞானி அப்துல்கலாம் கையில் விருது வாங்கினார். பின் நாளில் அணு விஞ்ஞானி அப்துல்கலாம், இந்தியாவின் ஜனாதிபதியான பின் தனது செவாலியர் விருதை காண்பித்து தன்னை அடையாளப்படுத்தி மகிழ்ந்தார்.

இரயில்வே தொழிலாளியான பின்பும், மண்ணின் கலைகளின் மீது கொண்ட தீராத காதலில் வீர விளையாட்டுகளை கற்று துடிப்புள்ள இளைஞனாகவும், நாடக கலையில் ஆர்வம் கொண்டு தன் குரு M.S.K.சாமி வழியாக தன்னை மெருகேற்றி கொண்டவர்.   கிறிஸ்தவரான அலெக்ஸ் தான் வசிக்கும், திருச்சி, பாலக்கரை பகுதியில் உள்ள துரைசாமிபுரத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் மீதும், புனிதரின் மீதும் மிகுந்த பக்தி கொண்டு விளங்கினார். அப்பகுதி மக்களின் துணைக்கொண்டு உருவான அவ்வாலயத்திற்கு தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டு அப்பகுதி மக்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நடிகர் அலெக்ஸ்
ALEX – நடிகர் அலெக்ஸ்

நாடகத் துறை :

ஆரம்பத்தில், நாடகத் துறையில் சிறந்து விளங்கியவர். ‘புதுவாழ்வு’ என்னும் சமூக-ஆன்மிக விழிப்புணர்வு நாட்டிய நாடகத்தை தமிழ்நாட்டின் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் தன் வழிகாட்டி தந்தை அருட்திரு இருதயம் அந்தோணி துணைக் கொண்டு அரங்கேற்றி சாதனை படைத்து பல விருதுகளைப் பெற்றார்.

திரைத்துறை :

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வெள்ளித்திரையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்கிய முதல் படம் ‘வள்ளி’யில் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்து பெயர் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார்.

மேஜிக் துறை :

எத்துறையில் ஈடுபட்டாலும் அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விடாமுயற்சியும், கடின பயிற்சியும் மேற்கொள்பவர் அலெக்ஸ். பல ஆண்டுகள் கற்று  பயிற்சி செய்தாலும் முதல் இடம் வர முடியாமல் தடுமாறும் இலட்சக்கணக்காண மேஜிக்மேன்கள் (மாய வித்தை) மத்தியில் இரண்டே ஆண்டுகளில் சினிமா நடிப்பு என்ற பெரும் பரபரப்பிற்கு மத்தியில் மேஜிக் கலையை நுணுக்கமாய் விரைவாய் கற்று சிறந்த மேஜிக்மேனாய் திகழ்ந்தார். 2010-ஆம் ஆண்டு திருச்சி, துரைசாமிபுரத்தில் தன்னை வளர்த்த ஆலயத்தின் ‘புது வாழ்வு’ மேடையில் பொது மக்களின் முன்னிலையில் 24 மணி நேரம் தொடர் மேஜிக் செய்து கின்னஸ் சாதனை புரிந்தார்.  அதனை, “எம் மண்ணின் வெற்றி”யென குறிப்பிட்டார்.

கொடையுள்ளம் :

நலிவடைந்த நாடக நடிகர்களுக்கு உதவி தேவைபட்டால் ஓடிச் சென்று உதவிடும் பாங்கும், மதம் பார்க்காமல் தன்னை தேடி வந்து கோவில் கட்ட உதவி கேட்பவர்களுக்கும் இல்லையென கூறாமல் உதவியதில் இப்பகுதியின் கர்ணனாகவே வாழ்ந்தார்.

திருச்சிக்கே என்றென்றும் பெருமை சேர்க்கும் நடிகனாய், சமூக சேவகனாய், மேஜிக் சாதனையாளனாய் என இவர் வாங்கி குவித்திருக்கும் விருதுகள் மலைக்க வைக்கும். சமூக சேவையில் இவரின் பணியினை பாராட்டி 2010ம் ஆண்டில் செவாலியே (2010) விருது வழங்கப்பட்டது.

அலெக்ஸ் நினைவு அஞ்சலி
அலெக்ஸ் நினைவு அஞ்சலி

இவரின் உழைப்பும், அர்ப் பணிப்பு உணர்வும் இவரை பல உயரங்களுக்கு இட்டுச் செல்லும் என்னும் நம்பிக்கை யை காலதேவன் உடைத்து திடீர் நெஞ்சுவலியில் தன் விருதுகளின் சுவடுகளோடு 2011ம் ஆண்டு மே 1ம் தேதி இயற்கை எய்தினார்.  மாமனிதன் அலெக்ஸ் முன்னெடுத்த சமூக சேவை, நடிப்புத்துறை, பிறருக்கு உதவுதல் இவற்றை இன்றும் அலெக்ஸின் துணைவியார் திரவியமேரி, மகள்கள் பிரின்சி ராஜா மற்றும் டீனா ஜெரால்டு தொடர்ந்து பின்பற்றுவது தான் இன்றும் அலெக்ஸ் நினைவுகளை இயக்குகிறது என்பதே நிஜம்.

– அங்குசம் ஆசிரியர் குழு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.