அங்குசம் சேனலில் இணைய

போலிசுக்கு தலைவலியை ஏற்படுத்திய திருச்சி டிராவல்ஸ் அதிபர் தற்கொலை கடிதம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

போலிசுக்கு தலைவலியை ஏற்படுத்திய திருச்சி தொழில் அதிபர் தற்கொலை கடிதம் ! 

 

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சரவணசெல்வம். இவர் இந்திய ராணுவத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் திருவடி தெருவில் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். 3.09.2022 இரவு தற்கொலை செய்து கொண்டார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அவர் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருக்கிறார் அவர் எழுதிய கடிதத்தில் அதில் என்னை வாழ விடாமல் பொய் வழக்குகள் போடும் தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை என் மரணத்திற்கு முழு பொறுப்பு இவர்களுடன் காவல் துறையில் வேலை செய்யும் ஐஎஸ் திருமூர்த்தி , ரைட்டர் முத்துசாமி டைலர் கடை செல்வி, தனலட்சுமி தாய் மல்லிகா ஆகியோரும் இவருக்கு உதவியே எஸ்.ஐ அறிவழகன் ஆகியோரும் பொறுப்பு என எழுதியுள்ளார்.

சரவணா செல்வம் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியவர். இது குறித்து அந்த பகுதியில் விசாரித்த போது கடந்த டிசம்பர் நான்காம் தேதி சரணன்செல்வம் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். கடந்த ஜூலை மாதம் லாவண்யா ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார் அதில் திருவள்ளுவர் தெருவில் டைலர் கடை நடத்தி வரும் தனலட்சுமி என்பவருடன் எனது கணவருக்கு பழக்கம் இருந்தது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஸ்ரீரங்கம் போலிஸ்
ஸ்ரீரங்கம் போலிஸ்

அவர் எனது கணவரை  மிரட்டி அவருடன் தகாத உறவு ஏற்படுத்தி இருவரும் தனிமையில் இருந்த போதும் ஆபாச படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறித்துள்ளனர்.தனலட்சுமி கணவர் ரவி மற்றும் குடும்பத்தினர் இதற்கு உடந்தையாக உள்ளன அவர்கள் பல கட்டங்களாக என் கணவரிடமிருந்து பல லட்ச ரூபாய் பணம் பறிக்கிறார்கள்.

மேற்கொண்டு ரூபாய் 10 லட்சம் பணம்  மிரட்டி வந்த நிலையில் போலீஸ் என கூறிக்கொண்டு சிலரும் என் கணவரை மிரட்டி வருகின்றனர் பணம் தர முடியாமல் பணம் தராவிட்டால் செத்துப் போ என தற்கொலைக்கு தூண்டியுள்ளனர்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். அப்போது போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இப்போது சரவண செல்வம் தனலட்சுமி உள்ளிட்ட பெயர்களை குறிப்பிட்டு எழுதி,  இவர்கள்தான் என் சாவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர.

தனது கணவரின் தற்கொலை செய்து கொள்ள தூண்டி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாவண்யா போலீசில் புகார் செய்துள்ளார் இதற்கிடையே லாவண்யா அளித்த புகாரின் படி போலீசார் தனலட்சுமி அவர் கணவர் ரவி ஆகியோர் மீது சரணசெல்வத்தை  தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.