சீட்டாட்டம் ,துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு , அரிவாள் வீச்சு தலைதூக்கும் ரவுடிகள் மோதல் !
10க்கும் மேற்பட்ட ஆட்களுடன் 2 கார்களில் நாட்டு வெடிகுண்டுகள் பிஸ்டல் துப்பாக்கியுடன் பப்ளு குரூப்பினர் வந்து ரமேசை தீர்த்துக்கட்ட
திருவெறும்பூர் அருகே சினிமா போல் சம்பவம் சீட்டாட்டத்தில் பங்கு பிரிப்பதில் தகராறு பிரபல ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி பிஸ்டல் துப்பாக்கியால் சுட்டும் கொலைவெறி தாக்குதல்? பிரபல ரவுடிக்கு அரிவாள் வெட்டு
திருவெறும்பூர் செப் 4
திருவெறும்பூர் அருகே வெட்டு சீட்டாட்டம் நடத்தியல் பணம் பிரிப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று நாட்டு வெடிகுண்டுகள் வீசியதோடு,பிஸ்டல் துப்பாக்கியால் சுட்டும், அறிவாளால் வெட்டியதில் பிரபல ரவுடிக்கு படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் இது பற்றிய விவரம்.
திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.எஸ்.ஆர். ரமேஷ் இவர் வெட்டு சீட்டாட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில்ஆர்.எஸ்.ஆர்.ரமேஷ் குரூப்பிற்கும் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பப்ளு குரூப்பிற்கும் இந்த வெட்டு சீட்டாட்டத்தில் வரும் பணத்தை பிரித்துக் கொள்வதில் இடையே இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 02.09.2022 இரவு ஆர்.எஸ்.ஆர். ரமேஷின் பணந்தோப்பில் வெட்டு சீட்டாட்டம் நடந்துள்ளது.
அப்பொழுது அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட ஆட்களுடன் 2 கார்களில் நாட்டு வெடிகுண்டுகள் பிஸ்டல் துப்பாக்கியுடன் பப்ளு குரூப்பினர் வந்து ரமேசை தீர்த்துக்கட்ட வந்துள்ளனர்.
இந்த ரகசிய தகவலை தெரிந்து கொண்ட ரமேஷ் தலைமறைவாக இருந்து கொண்டு தனது கூட்டாளி சின்ன சூரியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த சேட்னி மகன் தீன்(36) என்பவனை அனுப்பி பப்ளுக்குரூப்பை தாக்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
தனது அடியாட்களுடன் அங்கு சென்ற தீன் பப்லு தரப்பினருடன் மோதி உள்ளார்.
இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதில் பப்லு தரப்பினர் 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசி பிஸ்டல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக தீன் தரப்பினர் இதில் எவ்வித காயம் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
பின்னர் பப்ளு தரப்பினர் அரிவாளால் வெட்டியதில் தீனுக்கு இடது வலது கைகள் மற்றும் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
வெட்டுப்பட்ட சேட்னி மகன் தீன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இதில் பப்ளு குரூப்பை சேர்ந்த உறையூர் கணேசன் மகன் அரவிந்த் ( 27 ) என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இது சம்பந்தமாக நவல்பட்டு போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த இருவரையும் மீட்டு அரவிந்தனை திருச்சி அரசு மருத்துவமனையிலும் தீனை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இரு தரப்பையும் சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதோடு
நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெரிய அளவில் பணம் வைத்து வெட்டு சீட்டாட்டம் நடப்பது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
இதேபோல் திருவெறும்பூர் காவல் நிலைய பகுதியில் நடராஜபுரம்,ஆலத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் சீட்டாட்டம் நடந்து வருவதாகவும் அதில் அவ்வப்பொழுது அடிதடி மோதல் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இப்பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோதமான சீட்டாட்டத்தை காவல்துறையினர் உடனடியாக தடுக்க வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.