அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பதவிக்காக பல இலட்சங்கள் ! பணமும் இல்லை… பதவியும் இல்லை… மிரட்டும் தவெக நிர்வாகி !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், மதுரை தெற்கு மாவட்ட செயலாளருமான தங்கப்பாண்டி மீது தமிழக வெற்றிக்கழகத்தின் மகளிர்அணி பெண் நிர்வாகி ஷர்மிளா சில வாரங்களுக்குமுன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழக வெற்றிக்கழகத்தில் தங்கப்பாண்டி சாதி பார்த்து பதவி வழங்குகிறார். வசதியான பெண்களிடம் பணத்தைப்பெற்றுக் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தில் பதவி வழங்கி உள்ளார். கடன் பிரச்சினைகளை தீர்க்க தங்கப்பாண்டி பெண் நிர்வாகிகளிடம் பணம் வாங்கினார். என்னுடைய நகைகளை அடகு வைத்து தங்கப்பாண்டிக்கு பணம் கொடுத்துள்ளேன் வட்டி கட்ட முடியாமல் நகைகளை விற்று விட்டேன்.

பாலாஜி
பாலாஜி

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

ஒரு காலகட்டத்தில் முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்தேன் தங்கப்பாண்டியிடம் தயவு செய்து என்னுடைய பணத்தை பெற்றுத்தாருங்கள் தங்கப்பாண்டிமீது புகார் தெரிவித்து இருப்பதால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஷர்மிளாவின் கணவர் பாலாஜி மதுரை மாநகரகாவல் துறையில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி பேசுகையில் தமிழக வெற்றிக்கழகத்தில் பதவி தருவதாக கூறி தங்கப்பாண்டி எங்களிடம் ஐ போன், சோபா,பிரிண்டர் வாங்கி உள்ளார்.

2026 June 11 - 17 Angusam Book

தங்கப்பாண்டி
தங்கப்பாண்டி

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

மேலும் தங்கப்பாண்டி மகன் சஞ்சய் ஜிபே எண்ணிற்கு அவ்வப்போது பணமும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 10 லட்சம் ஆகும். மேலும் தொழில் முதலீடு செய்யலாம் என ரூ.16 இலட்ச பெற்றுள்ளார். நிலத்தை அடமானம் வைத்து கொடுத்துள்ளதால் எங்கள் குடும்பம் கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது. இதனால்தான் என் மனைவி தற்கொலைக்கு முயன்றார். பணத்தை கேட்டால் தர முடியாது என மிரட்டுகிறார்கள். இவ்விவகாரம் தொடர்பாக சி.டி.ஆர்.நிர்மல்குமார் என்னிடம் பேசி பிரச்சினை எதும் செய்ய வேண்டாம் என கூறினார். எனக்கு என்னுடைய பணத்தை பெற்று தர வேண்டும். தமிழக வெற்றிக்கழக மேடையில் நிர்வாகிகளை ஏற்ற வேண்டும் என்றால் தங்கப்பாண்டிக்கு தலா ரூ.10,000  பணம் தரவேண்டும். காவல்துறையில் புகார் அளிக்ககூடாது ஊடகத்தில் பேட்டி அளிக்க கூடாது என என்னை மிரட்டுகிறார்கள்.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.