விஜயகாந்த் அடிப்படையில் ஆபத்தானவர் அல்ல… ஆனால் விஜய் அப்படிப்பட்டவர் அல்ல..
விஜய் அப்படிப்பட்டவர் அல்ல..
“விஜயின் வாகனம் மெதூதூ…. வாக ஊர்ந்து செல்கிறது.. நான்கு கி.மீ. தூரத்தை கடக்க இரண்டு மணி நேரம் ஆகிறது” என்று வியக்கிறார்கள்.
இதில் வியப்பதற்கு ஏதுமில்லை… விஜய்க்கு கண்டனம்தான் தெரிவிக்க வேண்டும்.
அவர், தொண்டர்களை ஒதுங்கி நிற்கச் சொல்லி வாகனத்தில் இயல்பான வேகத்தில் சென்றால் இத்தனை பிரச்சினைகள் கிடையாது.
ஆனால், மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் வரட்டும் என காவல்துறை சொன்னதை ஏற்ற விஜய்… அதை தொண்டர்களுக்கு கடத்த விரும்பவில்லை.
அதனாலேயே மேலும் பல இடங்களில் இருந்து ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள்.
இதனால் மருத்துவனைக்குச் செல்வது உள்ளிட்ட அவசிய விசயங்களுக்குச் செல்லும் பொது மக்களுக்கு மிகுந்த சிரமம்.
1994ல் இதே திருச்சியில், மதிமுகவின் (முதல் பேரணி) நடந்தது. முதல் நாள் மாலை துவங்கிய ஊர்வலம், மறுநாள் காலையில்தான் திடலை அடைந்தது.
ஆனால் பொது மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை.
அக்கட்சியின் பொ.செ. வைகோ, பாரம்பரிய அரசியல் தலைவர்.. அந்தக் கட்சித் தொண்டர்களும் அரசியல் புரிதல் உள்ளவர்கள்.. ஆகவே பிரச்சினை ஏற்படவில்லை.
பல வருடங்களுக்கு முன் கடலூரில் நடபெற்ற சி.பி.எம். மாநாட்டுக்குச் சென்றேன். லட்சக்கணக்கானவர்கள் கூடினர். ஆனால் பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை.
ஒரு யு டியுப் சேனலில் பார்த்தேன்…
விஜயுடன் சிறு வேடத்தில் நடித்தவர், “அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ரசிகர்கள் ஏராளமாக வந்துவிட்டார்கள். விஜய், ‘நான் கையைத் தூக்கின உடனே, ரசிகருங்க கத்துவானுங்க பாரேன்’ என்றார். அதே போல அவர் கையைத் தூக்கிக் காண்பித்ததும் ரசிகர்கள் கோசமிட்டனர்” என்றார் அந்த நடிகர்.
இதிலிருந்து விஜயின் மனநிலையை அறியலாம்.
“கருத்துக்களைப் பேச மாட்டேன்.. ஜாலியாக சினிமா வசனம் போல பேசுவேன். நான் பேசுவது மட்டும்தான் மாநாட்டில் ஹைலைட். ரேம்ப் வாக் போவேன்…” என்பதே விஜயின் மனநிலை. தற்போதைய தி.மு.க. அரசை வமர்சிக்க எவ்வளவோ விசயங்கள் உண்டு.

“வெள்ளிக்கிழமை ராமசாமி போல, சனிக்கிழமை பொலிட்டீசியனாக இருப்பேன்” என்பதும் சரியில்லை. ஆங்கிலத்தில், “சண்டே சின்ட்ரோம்” என்பார்கள். அது போல இருக்கிறார்.
அரசியல்வாதிகளில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. அவர்களில் நான் மிகக் கடுமையாக விமர்சித்தது விஜயகாந்தைத்தான். அவரை மக்கள் நலக்கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்தபோதும் கடுமையாக விமர்சித்தேன்.
ஆனால் விஜயகாந்த் அடிப்படையில் ஆபத்தானவர் அல்ல. ஆனால், ஆனால்… விஜய் அப்படிப்பட்டவர் அல்ல.
— டி.வி.சோமு
Comments are closed, but trackbacks and pingbacks are open.