அனுதாப அரசியல் தேடும் நடிகர் விஜய் ! ..
தேர்தல் ஆணைய அதிகாரி, “48 மணி நேரத்திற்கு முன் இணையவழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். இவர்கள் திடீரென நேரில் மனு கொடுத்து, மறுநாளே அனுமதி கேட்கிறார்கள்” என்று அனுமதி கிடைக்காததற்கான காரணத்தைத் தெளிவாக அறிவித்தார்.
ஆனாலும், தன்னை வேண்டுமென்றே முடக்குவதாக விஜய்யும் அவரது கூட்டாளிகளும் பேசி வருகிறார்கள். ஒருவழியாகத் தாமதமாக நடைமுறையை உணர்ந்தனர். பெரம்பூர் தொகுதியில் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர்.
குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி, அங்கு 3,000 தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என்றனர். அந்த இடத்தைத் தேர்தல் அதிகாரி கீதா மற்றும் போலீசார் பரிசீலித்தனர். அங்கு 200 முதல் 300 பேர் மட்டுமே கூட முடியும் என்பது தெரிந்தது. ஆகவே, “வேறு இடம் சொல்லுங்கள்” என்று பதில் தெரிவிக்கப்பட்டது.
உடனே, “கூட்டம் நடத்தக் கூட அனுமதி இல்லையா?” எனப் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் விஜய்.
இதற்கிடையே, “நாங்கள் கூட்டம் நடத்த இருந்த இடத்தில் திடீரென மாநகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி, எங்கள் கூட்டத்தைத் தடுத்தனர்” என்றார். அதற்கும் தேர்தல் அதிகாரி, “அத்தியாவசியக் குடிநீர்ப் பணிக்காகத் தோண்டப்பட்ட அந்தப் பள்ளம், உடனடியாக மூடப்பட்டது” என்று பதில் அளித்து இருக்கிறார்.
பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல் செய்த விஜய், காவல்துறை ஏற்கனவே தெரிவித்த – விஜய் தரப்பும் ஒப்புக்கொண்ட – நேரத்திற்கு முன்பாகவே பிரச்சாரத்திற்குக் கிளம்பினார். அதுவும், ‘ரோடு ஷோ’வுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. “புத்திசாலித்தனமாக” தனது வாகனத்தை மெதுவாக ஓடச் செய்து, கைகளைக் காட்டியபடி சென்றார். இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்தப் பகுதி மக்கள் சிலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அடுத்த இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்வதை நிறுத்திவிட்டு, பனையூர் சென்றுவிட்டார்.
கரூர் பலிகள் நடந்த பிறகும், விஜய் மனநிலை மாறவில்லை என்பதை இது உணர்த்துகிறது. ஆனால், “போலீஸ் தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை” என்கிறார்.
தற்போது தமிழ்நாட்டில் இருப்பது காபந்து அரசு. அதாவது தேர்தல் ஆணையம்தான் அதிகாரம் கொண்டது. ஆனால், நடக்காத எல்லாவற்றிற்கும் திமுகவைக் குறை சொல்கிறார் விஜய்.
தவிர, வேட்புமனுவில் தனது பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகளுக்குக் கடன் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இது பெரும்பாலான அரசியல் முதலைகள் செய்வதுதான். விஜய்யின் பெற்றோரை விடுங்கள்.
இவரது நடவடிக்கைகள் தாங்க முடியாமல் மனைவி விவாகரத்து கோரியுள்ளார், பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த நிலையில் அவர்களுக்குக் கடன் அளித்ததாக வேட்புமனுவில் தெரிவித்து இருக்கும்போது, அவர்கள் அதை மறுக்கலாம். இதனால் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்கப்படும் நிலை கூட ஏற்படலாம்.
இப்படி எல்லாத் தவறுகளையும் விஜய் அறிந்தே செய்கிறார் என்பது புரிகிறது. (வேட்புமனு – மனைவி – கடன்… இது மட்டும் எனது யூகம்).

தற்போது, விதிமீறல்களில் ஈடுபட்டதாக, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் விஜய் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதையும் திமுக அரசு செய்ததாகவே விஜய் கூறுவார்.
தவிர தன் மீது தவறுகளை வைத்துக்கொண்டு, புகார் கொடுக்க டில்லி செல்ல இருப்பதாகவும் தகவல் உலவுகிறது.
விஜய்யின் இந்தத் தந்திர நடவடிக்கைகளுக்கு இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும்:
தன் பிரச்சாரத்தை முடக்குவதாகப் பொய் சொல்லி மக்களிடம் அனுதாபம் தேடுவது.
இதைக் காரணம்காட்டியே தேர்தலில் இருந்து விலகுவது.
மக்களே… விஜய்யை மன்னிக்காதீர்…. தான் செய்வது இன்னதென்று அவர் அறிந்தே இருக்கிறார்!
– டி.வி.சோமு








Comments are closed, but trackbacks and pingbacks are open.