ஒடிசா ரயில் விபத்து: உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்! பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒடிசா ரயில் விபத்து:
உச்ச நீதிமன்ற நீதிபதி
தலைமையிலான நீதி விசாரணை
நடத்தப்பட வேண்டும்!

பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

ஒடிசா ரயில் விபத்து குறித்து ஓரளவிற்கு உண்மையான காரணங்களைக் கண்டறிந்து வெளிக்கொணர உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது வெறும் கண்துடைப்பு விசாரணையாகவே அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS


உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை நடைபெற்றால் தான் ஓரளவிற்கு விபத்திற்கான உண்மையான காரணங்கள் வெளிவரும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

ராஜதானியும் சதாப்தியும் இருக்கையில் தற்போது நாட்டிற்கு தேவை ‘வந்தே பாரத்’ ரயில் அல்ல என அவர் கூறியுள்ளார்.

தண்டவாளங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான காலியாக உள்ள 3 லட்சம் ரயில்வே பணியிடங்கள் நிரந்தர ஊழியர்களுடன் நிரப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


உலகின் மிகப் பெரிய துறையான இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசு இதை மாற்றாந் தாய் மனப்பான்மையோடு அணுகி வருவதாகவும், ரயில் பயணமே பாதுகாப்பானது எனக் கருதி ரயில் பயணத்தைச் சார்ந்திருக்கும் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை ஒன்றிய பாஜக அரசு உடைத்துள்ளது என்றும் பேராசியர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரயில் பயணங்களை பாதுகாப்பு மிகுந்ததாக அமைய வைக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். தனியார் மயம் மூலம் ரயில்வே நிறுவனத்தை தடம்புரள வைக்கும் முயற்சியை மோடி அரசு கைவிட வேண்டும் என்றும் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.