தேர்தலுக்காக விரைந்து செயல்பட தொடங்கிய நகர்புற நிர்வாகம் !
திமுக தலைமை தற்போது வெளியாகியுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்து குதூகலத்தில் இருக்கிறது. இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த திட்டம் தீட்டி வருகிறது. மு க ஸ்டாலின் வெற்றி குறித்து எழுதிய கடிதத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக தொண்டர்களை அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாநிலத் தலைமை மாவட்டத்திற்கு முக்கிய அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து மாவட்ட செயலாளர்களுக்கு அனைத்து அதிகாரத்தையும் வழங்கியது. மாவட்ட செயலாளர்கள், கிளைக் கழக, ஒன்றிய நிர்வாகிகள் என்று அனைவரும் சிறப்பாக வேலை செய்து அனைத்து தொகுதிகளையும் திமுகவை கைப்பற்ற வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நகர்புறம் உள்ளாட்சித் தேர்தலையும் விரைவிலேயே நடத்தி அனைத்து மேயர் பதவிகளைக் கைப்பற்ற திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம். இதனால் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு பணியை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கி இருக்கிறாராம்.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக மாநகராட்சி அலுவலகங்களில் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறதாம். இதன் காரணமாகவே கும்பகோணம் மாநகராட்சியாகவும் மற்றும் 19 பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறதாம்.