கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களுக்கு அழைப்பு – மத்திய மண்டல ஐஜியின் புது திட்டம் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை சமீபகாலமாக எடுத்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்படுவதும், வழக்குப் பதிவு செய்யப்படுவதும் நடந்து வரக்கூடிய நிலையில் தமிழகத்தின் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கடந்த ஒரு வாரங்களில் என்கவுண்டர் செய்யப் பட்டிருக்கின்றனர். இப்படி தொடர் நடவடிக்கை களுக்கு மத்தியில்.

திருச்சி உட்பட்ட மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பொதுமக்களையும் போலீஸையும் இணைக்கும் புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க பொதுமக்களும் உதவி செய்யலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
இவ்வாறு திருச்சி மாவட்டத்தில் 4, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1, அரியலூர் மாவட்டத்தில் 2, பெரம்பலூர் மாவட்டத்தில் 2, தஞ்சாவூர் மாவட்டத்தில் 5, மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 என மொத்தம் 15 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன அவற்றை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர், இந்தநிலையில் பொதுமக்களும் போலீசாருடன் இணைந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடலாம் மேலும் கண்டுபிடிப்பதற்கு ஏதேனும் பயனுள்ள தகவல்களை கூறலாம், எப்படி தரும் ஒவ்வொரு தகவல்களுக்கும் சன்மானமாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

போலீஸ் ஓடு இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள விருப்பம் உள்ள பொதுமக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தொடர்பு கொள்ளும் மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

திருச்சி ஐஜி அலுவலகம் -0431 2333866,
திருச்சி டிஐஜி அலுவலகம் -0431 2333909,
தஞ்சாவூர் டிஐஜி அலுவலகம் – 0436 227747,
திருச்சி எஸ்பி அலுவலகம் – 9498100645,
புதுக்கோட்டை எஸ்பி அலுவலகம் – 9498100730
பெரம்பலூர் எஸ்பி அலுவலகம் – 9498100690,
அரியலூர் எஸ்பி அலுவலகம் – 9498100705,
தஞ்சாவூர் எஸ்பி அலுவலகம் – 9498100805,
திருவாரூர் எஸ்பி அலுவலகம் – 9498100905,
மயிலாடுதுறை எஸ்பி அலுவலகம் – 9442626792 இன்று தொடர்பு எண்களை மத்திய மண்டல ஐஜி வெளியிட்டுள்ளார்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.