நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக சரிவில் பாஜக வளர்ச்சி

அதிமுக சரிவில் பாஜக வளர்ச்சி - (முகநூல் தகவலுடன் ஆதவன்)

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக சரிவில் பாஜக வளர்ச்சி

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களில் வழக்கம்போல் பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒற்றை வாக்குகளையும் ஒற்றை இலக்க வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள். பூஜ்ஜிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களும் உண்டு.

டெபாசிட் இழந்த பா.ஜ.க. வேட்பாளர்களும் அதிகம். ஆனால் பா.ஜ.க. இந்தத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றதாகப் பாஜக ஆதரவாளர்களும் ஊடகவியலாளர்களும் ஊதிப்பெரிதாக பேசிவருகிறார்கள்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

”மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துவிட்டோம். தமிழக மக்கள் பா.ஜ.க.வுடன் பயணிக்கத் தயாராகிவிட்டனர்” என்கிறார் அண்ணாமலை. பா.ஜ.க. ஆதரவாளர்களும் ஊடகங்களும் மட்டுமல்ல பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும்கூட “பா.ஜ.க.வுக்கு வெற்றி, சமூகநீதி என்னாச்சு?” என்கிறார்கள். பா.ஜ.க. வளர்ந்திருக்கிறதா என்றால் வளர்ந்திருக்கிறதுதான். ஆனால் பூதாகரப்படுத்தும் அளவுக்கு வேகமான வளர்ச்சியா? புள்ளி விவரங்களைப் பார்ப்போம்

மாநகராட்சியில்

2011ல் பா.ஜ.க. வெற்றிபெற்ற இடங்களின் சதவீதம் – 0.49%. இப்போது மாநகராட்சியில் பா.ஜ.க. வெற்றிபெற்ற இடங்களின் சதவீதம் – 1.60%

நகராட்சியில்

2011ல் நகராட்சியில் பா.ஜ.க.வெற்றிபெற்ற இடங்களின் சதவீதம் – 1%. இப்போது நகராட்சியில் பா.ஜ.க. வெற்றிபெற்ற இடங்களின் சதவீதம் – 1.46%

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

பேரூராட்சிகளில்…

2011ல் பேரூராட்சிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்ற இடங்களின் சதவீதம் – 1.76%. இப்போது பேரூராட்சிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்ற இடங்களின் சதவீதம் – 2.40% 2011ல் தமிழக பா.ஜ.க. தலைவர் யார் என்றே தெரியாது. 2014ல் மோடி அலைவீசி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது பா.ஜ.க. 2019ல் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி. தமிழகத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன், முருகன், அண்ணாமலை, ஹெச்.ராஜா, காயத்ரிரகுராம் என்று பா.ஜ.க பிரபலங்கள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ ஊடகங்களில் அடிபடாத, தோன்றாத நாள்கள் இல்லை.

“தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள்தான். உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான்” என்கிறார் அண்ணாமலை. ஆனால் 10 ஆண்டுகளில் பா.ஜ.க. அடைந்திருக்கும் அதிகபட்ச வளர்ச்சி 1.11% மட்டுமே. இப்போது “தமிழகத்தில் நாங்கள் மூன்றாவது கட்சியாகிவிட்டோம்” என்று அண்ணாமலை சொல்வது உண்மை அல்ல. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசுக்கு அடுத்தபடியாகத்தான் பா.ஜ.க.

தேர்தல் நடந்த 12,759 இடங்களில் பாஜக வெறும் 2.4% இடங்கள் அதாவது 312 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அதில் 268 இடங்கள் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் சார்ந்தவைதான். ஆனால் காங்கிரஸ் 586 இடங்களில் அதாவது 4.5% இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அதிலும் பா.ஜ.க. 100%போட்டியிட்டு 97.6% இடத்தில் தோற்று இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் போட்டியிட்டதோ 11% இடங்கள்தான். அதில் பெருவாரியாக வெற்றிபெற்றிருக்கிறது.

பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள் 4.82%. பா.ஜ.க பெற்றதோ 3 சதவீதம்தான். நகராட்சி வார்டு உறுப்பினர்களில் சி.பி.எம் 1.75% அதற்கும் கீழேதான் பா.ஜ.க. வெறும் 1.60%

சென்னை மாநகராட்சியை எடுத்துக்கொள்வோம். உமா ஆனந்தன் வெற்றிபெற்றவுடன் ஏதோ கோட்டையையே பா.ஜ.க பிடித்துவிட்டதாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் மட்டுமில்லை, பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும் கூச்சல் போடுகிறார்கள். இதற்கு முன்பே சென்னையில் வெற்றிபெற்ற பா.ஜ.க கவுன்சிலர்கள் உண்டு. 16 வார்டுகளில் போட்டியிட்டு 13 வார்டுகளை வென்றிருக்கிறது காங்கிரஸ். ஆனால் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு வார்டில் வென்றிருக்கிறது பா.ஜ.க.

சென்னை மாநகராட்சியில் 4 வார்டுகளில் பாஜக இரண்டாமிடத்தில் வந்திருக்கிறது. கட்சியே ஆரம்பிக்காத விஜளிணி மக்கள் இயக்கம் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 2-ம் இடத்திற்கு வந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். உண்மையில் இது பா.ஜ.க.வுக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட அதிமுகவுக்குக் கிடைத்த பின்னடைவு.

சரி, ‘காங்கிரஸும் சி.பி.எம்மும் கூட்டணியில் இருந்துதானே வென்றிருக்கின்றன. பா.ஜ.க. தனித்து நின்றல்லவா வென்றிருக்கிறது?” என்ற கேள்வி எழலாம். கன்னியாகுமரி மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம். திராவிடக் கட்சிகளைவிட தேசியக் கட்சிகளே அதிகம் செல்வாக்குள்ள மாவட்டம். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் மட்டும்தான் திமுக கூட்டணி. மேற்கு மாவட்டத்தில் தாங்கள் கேட்ட இடங்களைத் திமுக தராததால் காங்கிரஸும் சி.பி.எம்மும் தனித்துப் போட்டியிட்டன. சரிபாதி இடங்களில் தனித்துப் போட்டியிட்டும் கன்னியாகுமரி பேரூராட்சியை முதன்முறையாகக் கைப்பற்றியிருக்கிறது திமுக. 2011 உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று ஒரு நகராட்சித் தலைவர் மற்றும் 13 பேரூராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெற்றது பா.ஜ.க. ஆனால் இப்போதோ 3 பேரூராட்சிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது பா.ஜ.க.

கன்னியாகுமரி மாவட்டத்தின் 4 நகராட்சிகளில் பத்மநாபபுரத்தில் மட்டும்தான் திமுகவும் பாஜகவும் சமபலத்துடன் வென்றிருக்கின்றன. மற்ற 3 நகராட்சிகளும் காங்கிரஸ், திமுக, சி.பி.எம் வசம்தான். கன்னியாகுமரி, கோவை என்ற இரண்டு செல்வாக்குள்ள இடங்களிலும் சரிவையே சந்தித்துள்ளது பா.ஜ.க. எனவே பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கிறது என்றாலும் அது ஊதிப் பெரிதாக்கப்படும் அளவிற்கு பிரமாண்ட வெற்றி­யில்லை என்றாலும் அதிமுகவின் வாக்குச் சரிவில் பாஜக வளர்வது என்பது இயல்புதான்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.