’யுவி’ ஏரியா நியூஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அஜித் வினாயகா பிலிம்ஸ்’ பேனரில் வினாயகா அஜித் தயாரிக்கும் நான்கு மொழிப் படம் ‘ஆஷா’. சஃபர் சனல்  டைரக்டராக அறிமுகமாகும் ‘ஆஷா’வில் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ரமேஷ் கிரிஜா உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 15—ஆம் தேதி படத்தின் பூஜையும் ஷூட்டிங்கும் ஆரம்பமான அன்றே டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

சினிமா செய்திகள்ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன், ஜோஜு ஜார்ஜ், சஃபர் சனல் ஆகியோர் கேரள மாநிலம் திருவக்கரையில் உள்ள வாமன மூர்த்தி கோவிலில் குத்துவிளக்கேற்ற, ஜோஜு ஜார்ஜ் க்ளாப் அடிக்க, மதுநீலகண்டன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்தார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

சினிமா செய்திகள்சினிமாக்களின் ஆடியோ ரைட்ஸை வாங்குவதில் முன்னணியில் இருக்கும் ‘திங்க் ஸ்டுடியோஸ்’ ஸ்வரூப் ரெட்டி தயாரிப்பில் கவின் –பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தை கெவின் ராய்சன் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

சினிமா செய்திகள்வேல்ஸ் பிலிம்ஸ் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ’96 & ‘மெய்யழகன்’ பிரேம்குமார் டைரக்‌ஷனில் சீயான் விக்ரம் நடிக்கும் புதுப்பட அறிவிப்பும் போட்டோவும்  நேற்று[ஜூலை.16] வெளியானது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் குறித்து ஆடி மாசம் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகலாம். இப்படத்திற்கும் இன்னும் பெயர் வைக்கவில்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சினிமா செய்திகள்ராஷ்மிகா மந்தனா-தீக்‌ஷித் ஷெட்டி நடிக்கும் ‘தி கேர்ஸ் ஃபிரண்ட்’ படத்தின் முதல் பாடல் ‘நதிவே’ ஜூலை.16ஆம் தேதி ரிலீசானது. கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் தயாரிக்கும் இப்படத்தை ராகுல் ரவீந்திரன் டைரக்ட் பண்ணுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மலையாளம் மொழிகளில் ரிலீசாகும் இப்படத்திற்கு ஹேஷம் அப்துல்வஹாப் இசையமைக்கிறார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

சினிமா செய்திகள்எம்.எஸ்.பாஸ்கர் & ஃப்ராங்ஸ்டர் ராகுல் [டைரக்‌ஷன்] இணைந்து நடிக்கும், இன்னும் பெயரிடப்படாத படத்தின் பூஜையும் ஷூட்டிங்கும் ஜூலை.16ஆம் தேதி சென்னையில் நடந்தது. ‘குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ்’ பேனரில் புவனேஷ் சின்னசாமி இப்படத்தைத் தயாரிக்கிறார். இணைத் தயாரிப்பு : மெட்ரோ முரளி, மெட்ரோ கிரி.

2019-ல் ரிலீசான பரத்தின் ‘காளிதாஸ்’ சூப்பர்ஹிட்டானது. இப்போது அதே இயக்குனர் ஸ்ரீசெந்தில் டைரக்ட் பண்ணும் ‘காளிதாஸ்-2’ டீசர் வெளியாகியுள்ளது. டீசரை நடிகர் ரவி மோகன், மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் ரிலீஸ் பண்ணி படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ‘காளிதாஸ்-2’வில் பரத், அஜய்கார்த்திக், பிரகாஷ்ராஜ், ஆடுகளம் கிஷோர், பவானி ஸ்ரீ, சுரேஷ் மேனன், அபர்ணதி ஆகியோர் நடித்துள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு ‘பூவே உனக்காக’ சங்கீதா இப்படம் மூலம் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார். ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா, இசை : சாம்.சி.எஸ், எடிட்டிங் : புவன் ஸ்ரீனிவாசன், ஆர்ட் டைரக்டர் : துரைராஜ், நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ்.பழனியப்பன்.

விளக்கக் குறிப்பு :

தமிழ் சினிமாவின் முன்னணி பி.ஆர்.ஓ.யுவராஜின் நிறுவனத்தின் பெயர் ‘யுவி கம்யூனிகேஷன்ஸ்’. ஆனி மாதம் 32ஆம் தேதியுடன் முடிவடைவதால், கோலிவுட்டில் மட்டுமல்ல, எல்லா வுட்டிலும் ஜூலை.16-ஆம் தேதி ஏராளமான பூஜைகளும் புதுப்படங்கள் குறித்த அறிவிப்பும் சகட்டுமேனிக்கு வெளியாகின. இதில் யுவராஜ் பணிபுரியும் படங்களின் தகவல்கள் தான் மேலே உள்ளது.

 

  —    மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.