“வள்ளியம்மா பேராண்டி” இசை ஆல்பம் ரிலீஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“வள்ளியம்மா பேராண்டி” இசை ஆல்பம் ரிலீஸ்! தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் “வள்ளியம்மா பேராண்டி”. இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் ஜூலை 18 அன்று சென்னையில் நடைபெற்றது.

'Valliamma Perandi' Music Album
‘Valliamma Perandi’ Music Album

Srirangam MLA palaniyandi birthday

சிவகாமி ஐ.ஏ.எஸ் பேசும் போது…
“அன்புச் சகோதரர் அறிவுக்கு என் வாழ்த்துக்கள். அறிவுக்கும் என் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. ஒரு முறை கேஜி குணசேகரனை என் ஊருக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது என் அம்மா அவர் பாடல் கேட்டு அழுது விட்டார். அத்தனை உணர்வு மிக்கதாக அவர் பாடல் இருந்தது. அதே போல் இப்போது அறிவு இருக்கிறார். அவரே பாடல் எழுதி, நடனமாடி, மெட்டமைத்துப் பாடி உலகமெங்கும் கொண்டு செல்கிறார். இவர் சுயம்புவாக வளர்ந்திருக்கிறார். மிகச்சிறப்பான ஆல்பத்தின் மூலம் உணர்வுகளில் மாற்றம் கொண்டு வர முடியுமென்று சொன்னால், அறிவின் பாடலை அதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். அறிவின் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசியதாவது.
“தெருக்குரல் எனும் பெயரை மாற்றி, பல அடைமொழிகள் வைக்கும் அளவு அறிவு வளர்ந்துள்ளார். ஆல்பத்தின் பாடல் அத்தனை அற்புதமாக உள்ளது. பாடலை வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனத்திற்கு என் நன்றி”.
இயக்குநர் கல்பனா அம்பேத்குமார் பேசும் போது,
“ஒரு உதவி இயக்குநராக இப்போது தான் பணியாற்றி முடித்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து என்னை இந்த ஆல்பம் வீடியோவை இயக்கச் சொன்ன அறிவிற்கு என் நன்றிகள். இந்த ஆல்பம் உங்களுக்குப் பிடித்திருக்குமென நம்புகிறோம். இது எங்களின் முதல் முயற்சி ஆதரவு தாருங்கள்” என்றார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இசையமைப்பாளர் காச்சி,
“தெருக்குரல் அறிவை எனது தம்பியாகவே நினைக்கிறேன். நான் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ளேன். இந்த ஆல்பம் உங்களுக்குப் பிடிக்குமென்று நம்புகிறேன். இந்த ஆல்பத்திற்கு மியூசிக் புரொடியூசராக பணியாற்றியுள்ளேன். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி”.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

கலை நேசன் பேசியது,
” அறிவு என்னுடைய மகன் என்பதற்காக இல்லை, உண்மையிலேயே அவனின் ஒவ்வொரு பாடலுக்கும் நான் ரசிகன். அவன் பாடல்கள் எங்களின் வாழ்வைச் சொல்வது தான். அவனை இந்த நிலைக்குக் கொண்டு வந்த இயக்குநர் பா ரஞ்சித் அவர்களுக்கு என் நன்றிகள். நாங்கள் இவன் ஐஏஎஸ் அதிகாரியாக வருவான் என நினைத்தோம் ஆனால் இன்று சமூகத்திற்குதிரும்பச் செய்யும் இடத்திற்கு அவன் வந்திருப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி”.

'Valliamma Perandi' Music Album
‘Valliamma Perandi’ Music Album

இயக்குநர் பா ரஞ்சித் பேசும் போது,
“கேஸ்ட்லெஸ் கலக்டிவ் செய்யும் போது தான் அறிவை முதல் முறை பார்த்தேன். கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம். அந்த வகையில் இயங்கும் அறிவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலிருந்து அவரைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். காலாவில் மிக முக்கிய பாடலை எழுதினார். பல முக்கிய பாடல்களை எழுதியிருக்கிறார். அம்பேத்கருடைய சிந்தனைகள் எனக்கும் அவனுக்குமான நெருக்கமான சிந்தனையாக, உறவாக மாறியது. அம்பேத்கரிய சிந்தனைகளை எளிய வடிவமாக்கி எப்படி சந்தைப்படுத்துவது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் அறிவு கொண்டு செல்லும் ராப் பாடல்கள் வெற்றி பெறுவதோடு அந்த அரசியலையும் மக்களிடம் கொண்டு செல்வதை நேரில் கண்டிருக்கிறேன்.

அது தான் அவருக்குப் பெரிய புகழைப் பெற்றுத் தந்துள்ளது. அது எளிதில் கிடைக்காது. உலகளவில் தனி இசைக் கலைஞர்கள் மிகப்பெரிய புகழ் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது இங்கு ஏன் நிகழவில்லை எனும் போது தான் அறிவின் பங்கு மிக முக்கியமானதாகிறது. அவர் மூலம், இப்போது பல கலைஞர்கள் வெளி வந்துள்ளனர். அறிவு மிக உணர்வுப்பூர்வமானவர். கலையை எப்படிப் பயன்படுத்துவது என்பது தான் எங்களுக்கான உரையாடலாக இருக்கும். எப்படி இவரால் இத்தனை பாடல்கள் இசையமைத்து உருவாக்க முடிந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. சோனி நிறுவனம் மூலம் இது மக்களிடம் சென்றடையும் என நம்புகிறேன். அறிவுக்கு இது முதல் படி தான். விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவர் இன்னும் உயரம் செல்ல வேண்டும்” என்றார்.

தெருக்குரல் அறிவு பேசும் போது, “என் வளர்ச்சிக்கு முழு காரணமாய் இருக்கும் அண்ணன் பா ரஞ்சித் அவர்களுக்கு என் நன்றிகள். இண்டிபெண்டட் மியூசிக் உள்ளே நான் வரக் காரணமே காஸ்ட்லெஸ் கலக்டிவ் மூவ்மெண்ட் தான். அது எனக்கு மட்டுமல்ல, பல கலைஞர்களுக்கு அடையாளம் தந்தது அந்த காஸ்ட்லெஸ் கலக்டிவ் தான். அதை உருவாக்கிய அண்ணன் பா ரஞ்சித்துக்கு நன்றி. வள்ளியம்மா பேராண்டி என்பதில் வள்ளியம்மா வரலாறு மிக முக்கியம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்று தேயிலைத் தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு, பல கஷ்டங்களைத் தாண்டி, இங்கு மீண்டும் வந்து வாழ்வை எதிர்கொண்ட வள்ளியம்மவி ன் வரலாறு மிக முக்கியம். என் அடையாளம் அது தான்.

பொதுவாகப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இந்த உலகில் என்னை அடையாளப் படுத்தும் முயற்சியாகத் தான் வள்ளியம்மா பேராண்டி ஆல்பத்தை உருவாக்கினோம். இந்த குழுவில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு முன் பயணித்த அத்தனை கலைஞர்களுக்கும் என் நன்றி. என் மீதான கேள்விகளுக்கான பதில் தான் இந்த ஆல்பம். நாம் வாழும் இன்றைய உலகில் அன்பை மீட்டெடுப்போம் நன்றி” என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.