சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு – பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்
சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு – பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்
திருவள்ளுவரைச் சனாதனத் தர்ம, சனாதன இந்துன்னு சொல்கிறார்கள். மரபு என்று இவர்கள் இன்றைக்கு இந்து என்று பேசுகிறபோதெல்லாம்கூடச் சனாதனம் என்கிற ஒரு சொல்லை இழுத்துக் கொண்டு வருவதற்கான காரணம் என்னவென்றால் சனாதனம் என்று இவர்கள் குறிப்பது வைதீக மரபு. வைதீக மரபு என்பது வேத மரபு. வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற மதம் வழிபாட்டுமுறை இவற்றையெல்லாம் பின்பற்றுவதுதான் சனாதனத் தர்மம். அதுதான் இந்து மதம் என்று இவர்கள் முன்வைக்கிறார்கள்.
திருவள்ளுவர் அறிவைப் பெற்றதெல்லாம் வைதீகம் என்று சொல்லப்படுகிற சனாதனம் என்று சொல்லப்படுகிற இன்றைக்கு இந்து. இந்து என்று இவர்கள் கூவிக் கொண்டிருக்கிற அந்த மரபினுடைய எதிர்மறையில் இருந்துதான் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டார். அது என்ன எதிர்மறை என்றால் ஆசீவகம் போன்ற வைதீக எதிர் மரபுகளில் இருந்துதான் எல்லா அறிவுகளிலும், பெறவேண்டியவற்றைப் பெற்றுக் கொண்டு, அவற்றைத் தமிழ்ச் சமூகத்திற்குத் தகுந்தாற்போல வடிவமைத்துப் பொதுநிலையாக வழங்கினாரே தவிர வேத மரபில் இருந்து பெயர்த்துக் கொண்டு வந்தார் என்று சொல்லுவது ஒரு ஏமாற்றுவேலை.
இன்னும் சொல்லப் போனால் திருவள்ளுவர் எந்த மதத்தையும் நேரடியாகக் கண்டித்தவர் கிடையாது. அவர் ஒரு மதத்தின் மேல் கண்டனம் வைக்கிறார அப்படின்னு சொன்னா அது வைதீகம் மரபினுடைய கொள்கைகள் மட்டும்தான்.
பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்துகிற மரபு வைதீக மரபு. ‘வள்ளுவர் இதுக்கு நேரெதிராக ஒரு வேலையைச் செய்கிறார். வள்ளுவரின் கடவுள் வாழ்த்து முதல் அத்தியாயத்தில் ஏழு திருக்குறளில் தலையைப் போற்றி பாடாமல் காலைப் போற்றி பாடுகிறார். மலர்மிசை ஏகினான் மான் அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார் என்கிறார். பிறவியாகிய பெருங்கடலை நீந்துவர்ஞ்.. நீந்தாதார் இறைவன் அடி சேராதார் என்று குறிப்பிடுகின்றார்.
மொத்தம் உள்ள பத்துக் குறளில் ஏழு குறள் திருவடிகளைப் போற்றுகின்றது. தலையைப் போற்று என்பவரைப் பார்த்து வள்ளுவர் சொல்கிறார் “கால் போன்று கீழான தொழில் செய்கிறவருடைய காலடியில் கொண்டுபோய் உன்னுடைய தலையை வை என்று சொல்லுவது வைதீகத்திற்கு நேரடியாக விடப்பட்ட சவால். முற்றான எதிர்க்கருத்து நிலைப்பாடு.
நீ தலையைப் போற்றுகிறாய் நான் தாளைப் போற்றுகிறேன் என்று வெளிப்படையாகத் தன்னுடைய நூலில் முதல் அதிகாரத்தில் ஏழு குரலில் அடித்துச் அடித்து சொல்லுகிறார்.
அதை இன்னும் வெளிப்படையாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வ செய்தொழில் வேற்றுமையான்’ என்னும் குறளில் சொல்லிவிடுகிறார். தொழிலில் எல்லாருக்கும் வேறுபாடுகள் வரும்.
பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்துவதற்கும், தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்று ஏற்றத்தாழ்வு பாராட்டுவதற்கும் அமைத்துக் காட்டுவதற்கும் எந்த வேலையும் கிடையாது என்பது வள்ளுவரின் கருத்துப் புலம். புத்தர் அறிவைப் பயன்படுத்து என்று சொன்னதனால் அவன் புத்தன்.
வள்ளுவர் சொல்கிறார் “இப்படிப் பல பேரும் புத்தியைப் பயன்படுத்து புத்தியைப் பயன்படுத்து” என்றுதான் சொல்கிறார்கள். புத்தியைப் பயன்படுத்து என்று சொல்லுகிற மரபு சனாதான மரபல்ல. அதற்கு எதிர் மரபு வள்ளுவர் மரபு.
-தொகுப்பு -: தி.நெடுஞ்செழியன்
முந்தைய தொடரை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்….
பௌத்த மதத்தில் இருந்து களவாடப்பட்ட கீதாசாரம் – பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன்