தலைநகர் சென்னையில் வன்னியர் வேட்பாளர்கள் – ஒரு பார்வை !
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தின் தனிச்சிறப்பான தன்மைக்கேற்ப குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் அடர்த்தியாக வசித்து வருகிறார்கள். அவர்களது அடர்த்தியையும் கருத்தில் கொண்டே, தங்களது வேட்பாளர்களை அரசியல் கட்சிகளும் தீர்மானித்து வருகிறார்கள். ஆனால், பல்வேறு சாதியினரும் கலந்து வாழ்ந்து வரும் சென்னையில் வன்னியர் சாதியை சேர்ந்தவர்களுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியாக அவர்களுக்கான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில், வன்னியர் சாதியினரின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து அலசுகிறது, இந்த புள்ளிவிவர செய்தித்தொகுப்பு.
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில், 1) பெரம்பூர் – ஆர்டி சேகர் 2) மாதவரம் – எஸ் சுதர்சனம் ; அதிமுக தரப்பில், துறைமுகம் – ராயபுரம் மனோ ; பா.ம.க. சார்பில், முன்னாள் நான் நகர மன்ற தலைவர் அம்பத்தூர்- கே என் சேகர் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் இதுவரை, பல்வேறு கட்சிகளை சேர்ந்த வன்னியர் சாதியினர் 23 பேர் போட்டியிட்டிருக்கிறார்கள்.
1) டி எல் ரகுபதி – காங்கிரஸ் : 1967,1971 – செயின் தாமஸ் சட்டமன்ற தொகுதி தோல்வி .
2) ஏ. செல்வராசன் – திமுக : 4 முறை (1977, 1980, 1984, 1991-இடைத்தேர்தல்) துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர்.
3) பொன்னுரங்கம் – திமுக : 3 முறை (1977,1980,1984) ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் வென்றவர்.
4) WR.வரதராஜன் – மார்க்சிக் கம்யூனிஸ்ட் கட்சி : 1989- இல் வில்லிவாக்கம் தொகுதி வெற்றி . 1991- வில்லிவாக்கம் தொகுதி தோல்வி.
5) ஜே சி டி பிரபாகர் – கிறிஸ்டியன் வன்னியர் – அதிமுக : 1980- வில்லிவாக்கம் எம்எல்ஏ. 1984- வில்லிவாக்கம் தோல்வி. 1989- வில்லிவாக்கம் தோல்வி. 2011- வில்லிவாக்கம் வெற்றி. 2016- கொளத்தூர் தோல்வி. 2021 வில்லிவாக்கம் தோல்வி.
6) E. கள்ளான் – காங்கிரஸ் : 1991- வில்லிவாக்கம் எம்எல்ஏ . 2006- வில்லிவாக்கம் அதிமுக சார்பில் நின்று தோல்வி.
7) N. கணபதி- திமுக : 1989- மயிலாப்பூர் வெற்றி.
8) என்பி ராமஜெயம் – திமுக : 1996- மயிலாப்பூர் வெற்றி.
9) டி கே சம்பத் – அதிமுக : 1996 – மயிலாப்பூர் தோல்வி.
10) RS. ஸ்ரீதர் – திமுக : 1989- சைதை தொகுதியில் வெற்றி. 1991- சைதை தொகுதியில் தோல்வி .
11) சி ஆர் கிருஷ்ணன் – பாமக : 2001- சைதை தொகுதியில் தோல்வி.
12) G. செந்தமிழன் – அ திமுக : 2006, 2011- ஆகிய 2 முறை சைதை தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றி. 2011- ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக பணியாற்றியவர். 2021- சைதை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
13) சி ஆர் பாஸ்கரன் – பாமக : 2006- சைதை தொகுதியில் தோல்வி .
14) எஸ் வேதாச்சலம் – அதிமுக : 2011- அம்பத்தூர் வெற்றி.
15) வி.மூர்த்தி – அதிமுக : 2011- மாதவரம் வெற்றி. ஜெயலலிதா அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் . 2021- மாதவரம் தொகுதியில் தோல்வி.
16) எஸ்.சுதர்சனம் – திமுக : 2016, 2021- இரண்டு முறை மாதவரம் வெற்றி.
17) கே செல்வம் – பாமக : 2011- மதுரவாயல் தொகுதியில் தோல்வி.
18) ஆர் டி சேகர் – திமுக : 2019- பெரம்பூர் இடைத்தேர்தலில் வெற்றி. 2021- பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி.
19) D. தட்சணாமூர்த்தி – அதிமுக : 2016- மாதவரம் தொகுதி தோல்வி.
20) தாடி எம் ராஜி – அதிமுக : 2011- வில்லிவாக்கம் தொகுதி தோல்வி.
21) காரம்பாக்கம் கா கணபதி – திமுக : 2021- மதுரவாயல் வெற்றி.
22) கே. என். சேகர் – பாமக : 2016- அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தோல்வி.
23) ராயபுரம் ஆர். மனோ – அதிமுக : 2026- சட்டமன்ற தேர்தலில் துரைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.