அங்குசம் சேனலில் இணைய

விவசாயிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. மற்றும் இடைத்தரகர் 2 பேரும் கைது !

5

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகரில் விவசாயி இடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உட்பட உடந்தையாக இருந்த நபரும் கைது.  இடைத்தரகராக செயல்பட்ட தையல் கடைக்காரர் உட்பட கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து அதிரடி காட்டிய விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கீழ உப்பிக்கூண்டு பகுதியைச் சேர்ந்தவர் நக்கீரன் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளவு செய்வது தொடர்பாக நில அளவைரிடம் விண்ணப்பம் செய்துள்ளார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மாறுவேடத்தில் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்
மாறுவேடத்தில் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்

நக்கீரனிடம் தொடர்பு கொண்ட கடம்பன்குளம் கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர், செல்வராஜ் (48) தங்கள் நிலத்தை அளவு செய்வதற்கு நீங்கள் வீணாக அலைய வேண்டாம், நாங்களே நிலத்தை அளந்து தருகிறோம், அதற்காக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் போதும் என விவசாயி நக்கீரனிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

என்னால் அவ்வளவு பணம் தர முடியாது ரூ. 25 ஆயிரம் மட்டுமே என்னால் கொடுக்க முடியும் அந்த பணத்தையும் நான் தயார் செய்து வருவதாக தெரிவித்து அங்கிருந்து சென்ற விவசாயி நக்கீரன் இலஞ்ச பணம் கொடுக்க விருப்பம் இல்லாததால் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஜூன் 9 இன்று செவ்வாய்க்கிழமை கிராம நிர்வாக அலுவலரிடம் தொடர்பு கொண்ட விவசாயி நக்கீரன் நீங்கள் கேட்ட பணம் தயார் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார், மறுமுனையில் பேசிய கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் காரியாபட்டி அலுவலகத்துக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

அங்கு சென்ற விவசாய இடம் கிராம நிர்வாக அலுவலர் இலஞ்ச பணத்தை அலுவலகத்திற்கு உள்ளே கொண்டு வர வேண்டாம், அருகில் உள்ள தையல் கடைக்காரரான மோகன்தாசிடம் இலஞ்ச பணத்தை கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

இலஞ்ச பணம் பெற இடைத்தரகராக செயல்பட்ட மோகன்தாஸ்
இலஞ்ச பணம் பெற இடைத்தரகராக செயல்பட்ட மோகன்தாஸ்

அதன்படி அங்கு சென்று லஞ்ச பணத்தை கொடுக்கவே அப்போது அங்கு கைலி உடன் மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை பிரிவு காவல் கண்காணிப்பாளரான ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர்.

தையல் கடைக்காரர் மோகன்தாசை கைது செய்து அவர் அளித்த வாக்குமூலத்தின் படி அலுவலகத்தில் உள்ளே இருந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜை கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

-மாரீஸ்வரன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

5 Comments
  1. P.Rajesh kannan says

    இவனை போன்றவர்களை ஈவு இரக்கமின்றி நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும்…

  2. Rajesh kannan P says

    இவனை போன்றவர்களை ஈவு இரக்கமின்றி நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும்…

  3. Raymond says

    லஞ்சத்தை வேரோடு அகற்றினாலே, அரசு அதிகாரிகள் நேர்மையாக பணிபுரிந்து அரசாங்கத்திற்கு சேர வேண்டிய பணத்தை அரசின் கஜானாவில் நிரப்பினாலே அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரித்து கொடுக்க இயலும் மற்றும் நாட்டின் வளர்ச்சியும் அசூர வளர்ச்சி அடையும்.வபட

  4. J.Thaveethuraj says

    உண்மை தான் சார்..

  5. J.Thaveethuraj says

    சட்டம் தன் கடமையை செய்யும்

Leave A Reply

Your email address will not be published.