அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘வாஸ்கோடகாமா’  திரைப்படம் திரை விமர்சனம் –

0

திருச்சியில் அடகு நகையை விற்க

அங்குசம் பார்வையில் ‘வாஸ்கோடகாமா’  திரைப்படம் திரை விமர்சனம் –  தயாரிப்பு ; 56 56 புரொடக்‌ஷன்ஸ்’ டத்தோ பா.சுபாஸ்கரன். டைரக்டர் : ஆர்ஜிகே. நடிகர்—நடிகைகள் : நகுல், அர்த்தனா பினு, கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், முனீஷ்காந்த், ஆர்.எஸ்.சிவாஜி, படவா கோபி, சேஷு. தொழில்நுட்பக் கலைஞர்கள்—ஒளிப்பதிவு : என்.சதீஷ்குமார், இசை : என்.வி.அருண், எடிட்டிங் : தமிழ்க்குமரன், பி.ஆர்.ஓ.: சக்தி சரவணன்.

படத்துக்கு டைட்டில் வாஸ்கோடமான்னு இருக்கே… ஏதாவது வரலாற்று ரீதியா, பூகோள ரீதியா கதையை கனெக்ட் பண்ணிருப்பாய்ங்கன்னு நம்பி தியேட்டருக்குள்ள போய் உட்கார்ந்தோம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அவருக்கு நன்றி, இவருக்கு நன்றின்னு ஒரு அம்பது பேருக்கு நன்றி கார்டு போட்ட பிறகு, ராமாயணம், மகாபாரதம், நன்மை-தீமை, த்ரேதாயுகம், சக்கரயுகம், சக்கரவியூகம், கலியுகம்னு டிசைன் டிசைனா உருட்ட ஆரம்பிச்சாரு டைரக்டரு.

சரி, தொலைஞ்சு போறாய்ங்க, வாஸ்கோடமான்னு டைட்டில் வச்சதுக்காவது காரணம் சொல்வாய்ங்கன்னு உட்கார்ந்திருந்தோம். இப்படியே உட்கார்ந்து..உட்கார்ந்து இடைவேளை விடும் நேரமா பார்த்து, வாஸ்கோடமாங்கிறது ஜெயிலுக்குப் பேரு. அந்த ஜெயிலில் இருக்கும் ஆளுகலெல்லாம் நன்மை செய்துவிட்டு உள்ளே வந்தவர்கள்.

https://www.livyashree.com/

அங்கே இருந்து ரிலீசாகணும்னா படுபயங்கரமான கொலை செய்யணுமாம். இதுக்காக தனி வகுப்பு எடுக்குறதுக்கு ஒருத்தன் இருக்கானாம். இதெல்லாத்தையும் பார்த்ததும் நமக்கு ஈரக்குலையே நடுங்கிப் போச்சு. ஓரளவுக்கு சுமாரா செயல்பட்டுக்கிட்டிருந்த மூளையும் பிசகிப்போச்சு. க்ளைமாக்ஸ் வரை இதான் கதியாகிப் போச்சு.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

VascoDaGama review
VascoDaGama review

”எப்பா…டைரக்டர் தம்பி, எங்களையெல்லாம் பார்த்தா உனக்கு எப்படிப்பா தோணுது?” –இப்படித்தாம்பா கேட்கத் தோணுது.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடந்தது. அதில் பேசிய, இந்தப் படத்தில் நடிச்ச  டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும் போது, “ எ ஃபிலிம் பை ஆர்ஜிகேன்னு போடுறதுக்கு முழுத்தகுதியும் டைரக்டருக்கு இருக்கு.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பேரு டத்தோ சுபாஸ்கரன், எடிட்டர் பேரு தமிழ்க்குமரன். அதனால லைக்கா சுபாஸ்கரன் போல பெரிய தயாரிப்பாளரா வருவாரு” என ஒரே போடாக போட்டார்.

பின்ன.. நாலு நாள் கால்ஷீட், பத்து லட்ச ரூபாய் சம்பளம் வாங்குனா லைக்கா சுபாஸ்கரன் மாதிரி என்ன.. ஹாலிவுட் ஜேம்ஸ்கேமரான் மாதிரி கூட வருவாரு. அப்படித்தானே ரவிக்குமார் அண்ணே..

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.