மார்ச் 27-ல் சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ ரிலீஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ மார்ச்-27 ஆம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘- ல் துஷாரா விஜயன், விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சீயான் விக்ரம் + இயக்குநர் அருண்குமார் + தயாரிப்பாளர் ரியா ஷிபு கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருப்பதாலும், ‘வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாவதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது
— மதுரை மாறன்.