அங்குசம் பார்வையில் ‘விடாமுயற்சி’
தயாரிப்பு: ‘லைகா புரொடக்சன்ஸ்’ சுபாஸ்கரன். தமிழ்நாடு ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ். லைகா தலைமை: ஜி.கே.எம். தமிழ்க்குமன்.டைரக்டர்: மகிழ் திருமேனி. ஆர்ட்டிஸ்ட்ஸ்: அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கஸாண்ட்ரா, ரம்யா, ஆரவ், ரவி ராகவேந்திரா. ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ், இசை: அனிருத், எடிட்டிங்: என்.பி.ஸ்ரீகாந்த், ஸ்டண்ட் டைரக்டர்: சுப்ரீம் சுந்தர், காஸ்ட்யூம் டிசைனர்: அனுவர்தன், ஆர்ட் டைரக்டர்: மிலன். பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா& அப்துல் நாசர்.
அஜித்தும் த்ரிஷாவும் அஜர்பைஜான் நாட்டுப் பிரஜைகள். 15 வருட திருமண வாழ்க்கை கசந்ததால் அஜித்திடம் இருந்து விவாகரத்து வாங்கி தனது பெற்றோர் வீட்டுக்கு கிளம்புகிறார் த்ரிஷா. “நானே கொண்டு போய் விடுறேன்” என அஜித் சொல்லியபடி இருவரும் காரில் கிளம்புகிறார்கள். போகும் வழியில் சில்லரை ரவுடி ஆரவ் ராவடி பண்ணுகிறார்.
அதன் பின்னர் பெரிய டிரக் வண்டி டிரைவராக இருக்கும் அர்ஜுனும் அவரது மனைவி ரெஜினா கஸாண்ட்ரா வும் த்ரிஷாவை பத்திரமாக தங்களின் வண்டியில் ஏற்றிச் செல்கிறார்கள். அதன் பின்னர் தான் அஜித்துக்கு தெரிகிறது தனது மனைவியை கடத்தியதே அவர்கள் தான் என்று.
த்ரிஷாவை அஜித் மீட்டாரா? மீட்டாரா என்ன மீட்டார் இதான் இந்த ‘விடாமுயற்சி’. மாஸ் ஓப்பனிங் உள்ள ஹீரோ அஜித். அந்த ஹீரோவுக்கு செம மாஸ் இண்ட்ரோ சீன் இல்ல, பில்டப் சாங் இல்ல. இதெல்லாம் தெரிந்து இந்தக் கதையை ஓகே பண்ணிய அஜித்தை தாராளமாக பாராட்டலாம் தான்.
அதுக்காக க்ளைமாக்ஸ் வரைக்கும் எந்த சீன்லயும் மாஸ் இல்லாட்டி எப்படி டைரக்டரே…? மசாலா சினிமா, வர்த்தக வெற்றிக்கான சினிமான்னு வந்த பிறகு அதெல்லாம் இல்லைன்னா எப்படி டைரக்டரே…? படத்தின் டைட்டில் கார்டு போடுவதற்கு முன் பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்திற்கு வாழ்த்துக்கள் என போட்ட போதும் டைட்டிலில் அஜித்குமார் என போட்ட போதும் தியேட்டர் சுவர்களே விரிசல் விழும் அளவுக்கு அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களின் விசில் சத்தமும் கைதட்டும் இருந்தது.
அதன் பின்னர் க்ளைமாக்ஸ்வரை இரண்டரை மணி நேரமும் ஆணி அடித்த மரப்பெட்டி மாதிரி உட்கார்ந்திருந்தார்கள் அஜித்தின் ரசிகர்கள். அவர்களின் நிலையே அப்படி என்றால் அஜித் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் பொதுவான ரசிகர்கள் நிலை அதைவிட பரிதாபம். இதைவிட பெரும் கொடுமை, ஒரு சீனில் அஜித்தை பூமர் என்கிறார் ஆரவ். இன்னொரு சீனில் “ஒன்னோட பொண்டாட்டிக்கு கள்ளக் காதலன் இருக்கான்” என்கிறார்கள் வில்லன் அர்ஜுனும் ரெஜினாவும். இந்த ரெண்டு பேரும் யாருன்னு க்ளைமாக்ஸுக்கு முன்னால ஒரு ஃப்ளாஷ் பேக் வச்சிருக்காய்ங்க பாருங்க… “அடேய் ஏன்டா இப்படி?”ன்னு கத்தலாம்னு நமக்கே தோணுச்சு.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படம் முடிஞ்சு வெளியே வந்த பிறகு”ஆமா எதுக்கு விடாமுயற்சின்னு டைட்டில் வச்சாய்ங்க. பலப்பல முயற்சிகளை விடாமல் எடுத்து த்ரிஷாவை அஜித் மீட்டிருக்கணும். அப்பன்னா ஓகே. ஆனால் அப்படி எதுவும் அஜித் பண்ணவேயில்லை. வில்லன் அர்ஜுன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுகிறார். க்ளைமாக்ஸ்ல மட்டும் ஒரு முயற்சி எடுக்குறார்.
பேசாம படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயரை வைத்து ‘அஜர்பைஜானில் அர்ஜுன்’ என டைட்டில் வச்சிருக்கலாம்ணு” நம்ம மண்டைக்குள்ள ஃப்ளாஷ் ஆச்சு. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மபூசன்’ விருதை அஜித்துக்கு அறிவித்திருக்கும் இந்த நேரத்தில் ‘விடாமுயற்சி’ யை இதற்கு மேல் விமர்சிப்பது நாகரீகம் இல்லை.
—மதுரை மாறன்.