விஜய் ஒரு RSS Product – எடப்பாடி ஒரு ஆர்எஸ்எஸ் அடிமை !
பாஜக-ஆர்எஸ்எஸ்சுக்காக மட்டுமே வேலை பார்க்கும் ஒரு செய்தி நிறுவனம் தான் இந்தியா டுடே ஆங்கில செய்தி சேனல்! ரிபப்ளிக் சேனலுக்கு சற்றும் சளைத்ததல்ல!
இங்கு அவர்களின் தமிழ்நாடு அரசியல் குறித்த ஒரு கருத்து கணிப்பை பாருங்கள்! ஒட்டுமொத்த இந்தியாவிலும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் பாஜகவின் வாக்கு சதவீதத்தையும் அதன் மாநிலத் தலைவரையும் ஒரு பொருட்டாக மதிக்காமலும், இன்றும் ஏறக்குறைய 20-25% வாக்கு வங்கியும், தமிழ்நாட்டின் கிராமங்கள் வரை கட்சிக் கட்டமைப்பை வைத்திருக்கும் அதிமுகவின் எடப்பாடியை துச்சமாக மதித்தும் ஒற்றை இலக்க மதிப்பெண்களை வழங்கி இன்றுவரை தேர்தலில் போட்டியிடாத, கட்சி கட்டமைப்பு பலம் குறித்து அறியாத விஜய்க்கு தந்திருக்கும் அதீத மதிப்பெண்ணை பாருங்கள்!

இதற்குப் பின்னால் இவர்கள் சொல்லாத ஒரு செய்தி ஒழிந்திருக்கிறது! அது அமீத்சா கூறிய, எந்த விலை கொடுத்தேனும் திமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற வாக்கியத்தின் பிண்ணனி, திமுக தவிர யார் வந்தாலும் அது Deep Stateன் திட்டத்தை பிரதிபலிக்கும், ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை நிறைவேற்றும் என்பதே!
இதன் மூலம் திமுகவிற்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கான agendaவின் ஒரு பகுதியே இந்த கருத்துத் திணிப்பு என்ற பொய்யான எண்கள் !
அதிமுகவை எதிர்க்கிறேன், பாஜகவையும் எதிர்க்கிறேன் என சொல்லிக் கொண்டே விஜய்யை மயிலிறகால் தடவிக் கொடுப்பவர்கள் ஆர்எஸ்எஸ்-பாஜகவை ஆதரிப்பதாகவே அர்த்தம்!
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த கருத்து கணிப்பு எண்களுக்கு உண்மையாகவே கோபம் கொள்ள வேண்டியவர்கள் அதிமுகவினரும், அதிமுகவை திமுகதான் காப்பாற்ற வேண்டுமென ஊதும் போலி ஜனநாயகவாதிகளும் தான்! ஆனால் பாருங்க அந்த அதிமுகவினர் அமீத்சாவின் கரங்களை பற்றிக்கொண்டு பிரச்சாரத்திற்கு வருகிறார்கள்!

தற்போதைய இந்திய, தமிழ்நாட்டு அரசியல் சூழலை உணர்ந்து அதற்கேற்றவாறு நகர்வுகளை நாம் செயல்படவல்லையெனில் நம் இருப்பை ஆர்எஸ்எஸ்சிடம் தாரை வார்ப்பதை யாராலும் தடுக்க முடியாது!
ஆம், விஜய் ஒரு RSS Product என்பதை உரக்கச் சொல்வோம் ! எடப்பாடி ஒரு ஆர்எஸ்எஸ் அடிமை என்பதை அழுத்திச் சொல்வோம் !
— பிலால் அலியார்.