விஜய் சேதுபதி + பூரி ஜெகன்னாத் படத்தின் ஷூட்டிங் நிறைவு!
தெலுங்கு முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த ஹேப்பி மொமெண்ட்ஸ் வீடியோவில் வி.சே.வும் பூரி ஜெகன்னாத்தும் காமெடி ரகளை பண்ணியுள்ளனர். இந்த சிறப்பு தருணத்தை படக்குழுவினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
வீடியோவில் பூரி ஜெகன்னாத் துடனும் படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எந்த அளவு நினைவில் நிற்கக்கூடியது என்பதையும், அவர்களை நிறைய மிஸ் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார் விஜய் சேதுபதி. பூரி மற்றும் சார்மி ஆகியோரும் இதே போல தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இதன் அடுத்த கட்டமாக , படக்குழு புரமோஷன் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் & டைட்டில் அறிமுகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
நடிகர்கள் :
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய்குமார், பிரம்மாஜி, விடிவி கணேஷ்.
தொழில் நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் , ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோலா,
இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
சி.இ.ஓ : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா
— ஜெ.டி.ஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.