விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஒன்பது மணி என்று சொல்லி அழைக்கப்பட்டு இருந்தாலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பதினோரு மணிக்கு மேல்தான் வந்தார்.

நிகழ்ச்சி துவங்கியது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பார்வையாளர்கள் பக்கம் பத்திரிகை நிருபர்கள், மனோதத்துவ நிபுணர்கள்,கறிக்கடை கடைக் காரர் ஒருவர் மற்றும் சிலர் வந்து இருந்தனர். வரிசையாக நிகழ்ச்சிக்கு வந்து இருந்தவர்கள் தங்களின் திறமைகளை சொன்னார்கள்.

நானும் நான் ஏன் கட்சி ஆரம்பித்தேன் என்று சொன்னேன். மீனவர் சுட்டுக்கொல்லப்படுவது நின்றது,ராஜீவ் கொலையாளிகள் மூவர் உயிரோடு இருப்பது எங்களால் தான் என்றேன். கோபிநாத் உங்கள் அரசியல் நோக்கம் என்ன என்று கேட்டார்.ஆட்சியை பிடிப்பது என்றேன். முதல்வர் ஆக வேண்டும் பின்னர் பிரதமர் ஆக வேண்டும் என்று நக்கலாக சொன்னேன். நான் முதல்வர் ஆனால் நாட்டின் பாதி பிரசினை தீர்ந்து விடும் என்றேன். கொள்ளை அடித்தவ்ர்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி அந்த அந்த பகுதி மக்களின் குறைகளை தீர்ப்பேன்.என்றேன். திட்டம் என்ன வைத்து இருகிறீர்கள் என்று கேட்டதற்கு நான் ஆட்சிக்கு வந்த பிறகு போடுவேன் என்று சொன்னேன்.

ஓவ்வொருவர் தங்களை குறித்து சொல்லும்போதும் கோபிநாத் சில விளக்கங்களை கேட்டார். ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தன் இலக்காக ஐ ஐ டி மற்றும் பிட் பிலானியில் படிக்கும் மாணவர்களை தன்னை போல் ஆட்டோ ஒட்டுபவராக மாற்றி மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்க வைப்பதே என்று சொன்னார்.

கோபிநாத் அவரிடம் சகட்டு மேனிக்கு கேள்விகள் கேட்டார். அப்போது பார்வையாளர் மத்தியில் இருந்த ஒருவர், அவர் இந்து பத்திரிக்கை நிருபராம்- பிரென்ச் குறுந்தாடி வைத்து இருந்தார்-, குறுக்கிட்டு இங்கே நிகழ்ச்சிக்கு வந்து இருப்பவர்கள் அனைவரும் WEIRD – ஆக தெரிகிறார்கள் ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுனரை எனக்கு நன்றாக தெரியும் அவருடைய ஆசை நியாயமானதே என்று ஆட்டோ ஓட்டுனருக்கு பரிந்து பேசினார். நான் என் கருத்தை சொல்ல கையை தூக்கி தூக்கி காட்டினேன் அனால் கோபிநாத் என் பக்கம் திரும்பவில்லை. ஆட்டோ ஓட்டுனரை தனக்கு நன்றாக தெரியும் அதனால் அவர் WEIRD அல்ல என்று சொல்லும் இந்த ஆள் மற்றவர்களை குறித்து முழுதாக தெரிந்து கொள்ளமால் எப்படி WEIRD என்று சொல்லலாம் என்று கேட்கவும் ஐ ஐ டி, பிட் பிலானியில் படித்தவுடன் ஆட்டோ ஓட்ட வந்தால் அவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று கேட்கவும் முயற்சி செய்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை,கொடுக்கப்படவில்லை.

மதிய இடைவேளைக்கு பிறகு சிலரை பத்திரிகையாளர்களும், சைகாலாஜி படித்த அறிவாளிகளும் குடைந்தெடுத்தார்கள். ஒரு சைகாலஜி அறிவாளி மழை சித்தரையும்,ஏ ஆர் ரகுமான் தன் பல்லவிகளை திருடிவிட்டார் என்று சொன்னவரையும் மன நோயாளிகள் என்று சொல்லி சிகிச்சை எடுத்துக்கொள்ள சொன்னார். எம் ஜி ஆர் பெயரில் கட்சி வைத்து இருந்தவரை ஜெயா டி வி நிருபர் வறுத்தெடுத்து விட்டார். மற்றுமொரு சைகாலாஜி அறிவாளி அழைப்பாளர்கள் அனைவரையும் இரண்டு விதமான மன நோய் உள்ளவர்களாக பிரித்து தன் மேதமையை காட்டிக்கொண்டார். எழுபத்திரண்டு வயது இங்கிலாந்து மலர் மருத்துவம் செய்யும் மருத்துவர் ஒருவரை அவர் வயதினை சுட்டிக்காட்டி அவருக்கும் மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சைகாலாஜி அறிவாளி ஒருவர் சொன்னார். குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோரின் வேண்டுகோளின் பெயரில் சிகிச்சை அளிக்கும் ஒருவரையும் கடுமையாக காய்ச்சி எடுத்தார்கள் நேரம் மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது. என்னை கேள்வி கேட்காமலேயே நிகழ்ச்சியை முடித்து விடுவார்களோ என்ற சந்தேகம் எனக்கு

வந்து விட்டது .ஏன் என்றால் அடுத்து அடுத்து

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வேறு வேறு நிகழ்ச்சிகள் எடுக்கவிருப்பதால் இந்த நிகழ்ச்சியை ஆறு மணி அளவில் முடித்து விடுவார்கள் என்று அங்கே இருந்தவர்கள் சொல்லி இருந்தார்கள்.

நான் மைக்கை கேட்டேன் கொடுக்கவில்லை. சத்தம் போட்டேன். இருட்டில் இருந்து ஒரு பெரும் குரல் காமராஜ் இப்படித்தான் சத்தம் போடச்சொன்னாரா என்று கேட்டது. அந்த குரலில் வன்மம் தெளிவாக தெரிந்தது. நான் சத்தம் போட்ட பிறகுதான் அகோரி சாமிக்கு தன்னை எல்லாம் மெண்டல் என்று சொல்லுகிறார்கள் என்பது தெரிந்தது. பயங்கர கோபம்

கொண்ட அவர் எப்படிடா என்னை மன நோயாளி என்று சொல்லலாம் என்று பெருங்குரலெடுத்து கர்ஜித்தார். தன் திறமையை நிரூபிக்க தான் இப்போதே நீரூபிக்க தயார் என்று களத்தில் இறங்கினார். இதற்கிடையில் நானும் எதிரணியை திட்டி தீர்த்தேன். உடனே அந்த அசரீரி குரல் சாமியாரை முடித்து விட்டு ஜெபமணி பையனை முடியுங்கள் என்ற குரல் கொடுத்தது. இதனால் அதிர்ந்து போன என் நண்பர் மைக்கை கேட்டு சத்தம் போட்டார். பிறகு அவரிடம் மைக் வந்தவுடன் எங்கள் கட்சி நிலை குறித்து சொன்னார். இன்னொரு நண்பர் மைக்கை வாங்கி பத்திரிகையாளர்களை திட்டி தீர்த்தார். இந்த நேரத்தில் ஒருவர்

அகோரி சாமியார் நிகழ்ச்சியை தனி அறையில் எடுக்கலாம் என்று சொன்னார். நான் அதெல்லாம் கூடாது இது நீயா நானா நிகழ்ச்சி இங்கேதான் எடுக்கவேண்டும் என்று சொன்னேன். ஒரே கூச்சல் குழப்பம். நான் மீண்டும் குரல் கொடுத்தேன். வாங்க வாங்க வந்து ஜெபமணி பையனை முடியுங்கள் என்றேன். அப்போது அந்த அசரீரி குரல் சற்றே மரியாதையாக (பய புள்ள கொஞ்சம் பயந்து விட்டது போலும்) ஜெபமணி மகனிடம் என்றுதான் சொன்னேன் என்று பல்டி அடித்தது. நான் சொன்னதெல்லாம் பொய் என்று சொன்ன சைகாலாஜி அறிவாளியிடம் சென்று விலாசம் கேட்டேன். திரு திரு வென்று முழித்தார், அடியாட்கள் வந்து அந்த பெண்ணுக்கும் எனக்கும் இடையில் வந்து நின்றார்கள். இதற்கிடையில் என் நண்பர்கள் அந்தோணியிடம் தகராறு செய்தார்கள். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டோம். என்னோடு சிலரும் வெளியேறினர். நான் மட்டும் குரல் கொடுக்கவில்லை என்றால் நிகழ்ச்சியை சட்டென்று முடித்து என்னையும் மெண்டல் கணக்கில் சேர்த்து இருப்பான் அந்த அந்தோணி. நிகழ்ச்சி ஒளி பரப்பக்கூடாது என்று நோட்டிஸ் அனுப்ப உள்ளேன். மான நஷ்ட வழக்கு போட ஏற்பாடு செய்துள்ளேன்.ஒருவருக்கு மன நிலை சரி என்றால் அதை அவரிடம் ரகசியமாக சொல்ல வேண்டும் அல்லது அவர் குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டும்..

உலகமே பார்க்கும் தொலை காட்சி நிகழ்ச்சியில் இப்படி ஒருவரை சொன்னால் அந்த நபரின் குடும்பம் என்ன பாடு படும்.

இத்தகைய ஆபத்தான விளைவுகளை குறித்து துளியும் கவலை இல்லாமல் கொஞ்சம் பேரை கூட்டி உட்கார வைத்து அனைவரும் மன நிலை சரியில்லாதவர்கள் என்று உலகுக்கு தவறாக வெளிச்சம் போட்டு காட்டத்துடிக்கும் விஜய் டி வி ,நீயா நானா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை சும்மா விடக்கூடாது.

அவர்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்காவிட்டால் நாறிப்போவார்கள்.

– ஜெபமணி மோகன்ராஜ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.