தேனீா் இலவசமாக வழங்கி விஜயகாந்திற்கு நினைவு அஞ்சலி செலுத்திய டீக்கடை உரிமையாளர் !
கோவில்பட்டியில் பொதுமக்களுக்கு டீ, காபி, வடை, பிஸ்கெட், பாசிப்பயறு, சுண்டல் மற்றும் நொறுக்கு தீனிகளை இலவசமாக வழங்கி வரும் டீ கடை உரிமையாளர்
தேமுதிக தலைவரும் தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
![மனோஜ் - டீக்கடை உரிமையாளர்](https://angusam.com/wp-content/uploads/2024/12/Screenshot-890.png)
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே SMG கருப்பட்டி காபி என்ற பெயரில் மாலை நேர கடை நடத்தி வரும் மனோஜ் என்பவர் விஜயகாந்த் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது கடையில் டீ, காபி, வடை, பிஸ்கெட், பாசிப்பயறு, சுண்டல் மற்றும் நொறுக்கு தீனிகளை பொது மக்களுக்கு காலை முதல் இரவு வரை இலவசமாக வழங்கி வருகிறார். இதனை பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள் அனைவரும் ஆர்வமுடன் சாப்பிட்டு வருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது குறித்து டீக்கடை உரிமையாளர் மனோஜ் கூறுகையில் சிறு வயதிலிருந்து விஜயகாந்தின் திரைப்படங்கள் மூலமாக தான் பெரிதும் கவரப்பட்டதாகவும், அவர் செய்த பல நல்ல செயல்களைப் போன்று தானும் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளில் தானும் தனது நண்பர்களும் இணைந்து அந்த டீக்கடையில் டீ காபி மற்றும் நொறுக்கு தீனிகள் இலவசமாக வழங்கியதாகவும், இது கேப்டன் விஜயகாந்திற்கு செலுத்திய மரியாதை என்றார்.
பேட்டி: மனோஜ் – டீக்கடை உரிமையாளர்
— மணிபாரதி.