விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அஸ்யூர் பிலிம்ஸ் & ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ லவ் மேரேஜ் ‘. இதில் விக்ரம் பிரபு , சத்யராஜ் , சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர், இசை:ஷான் ரோல்டன், படத்தொகுப்பு: பரத் விக்ரமன் , தயாரிப்பு வடிவமைப்பபு: எம். முரளி . தயாரிப்பாளர்கள்: டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ & ஸ்ரீநிதி சாகர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்போது படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண கலவரம் ‘எனும் முதல் பாடலும், பாடலுக்கான புரமோஷன் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷான் ரோல்டன் எழுதி, பாடியிருக்கிறார். படத்தின் டீசர் வெளியீடு உள்ளிட்ட புதிய அப்டேட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
— மதுரை மாறன்.