தென்கொரியா சினிமா நிறுவனத்துடன் தமிழ் சினிமா நிறுவனம் ஒப்பந்தம்!
சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்,தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீநிதி சாகர் பேசுகையில், ” ஃபிளிக்ஸ் ஓவனுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கூட்டாண்மை இரு தொழில் துறைகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களுக்கு எங்களுடைய முழு ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் தென் கொரியாவில் படபிடிப்பு நடத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தரும். கூடுதலாக கொரியன் கன்டென்டுகளை பல இந்திய மொழிகளில் மாற்றி அமைக்கும் உரிமையையும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.இந்திய பின்னணியிலான கொரிய திரைப்படங்களை ஃபிளிக்ஸ் ஓவன் தயாரிக்கும். தென் கொரிய பின்னணியிலான இந்திய திரைப்படங்களை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தயாரிப்பினைக் கடந்து இந்திய மற்றும் கொரிய கலைஞர்களை கொண்ட திரைக்கதைகளை உருவாக்குவதையும், இணைய தொடர்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை இணைந்து தயாரிப்பதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது ” என்றார்.
ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் தயாரித்த சினிமாக்கள்: ‘போதை ஏறி புத்தி மாறி’, ‘அன்புள்ள கில்லி’, ‘நித்தம் ஒரு வானம்’ , ‘ஸ்டார்’. இணைய தொடர்கள்: ‘பேப்பர் ராக்கெட்’ ( தமிழ்) ‘பாலு கனி டாக்கீஸ்’ (தெலுங்கு ).
— மதுரை மாறன்.