விக்ரம் பிறந்த நாள் ! தங்கலான் க்ளிம்ப்ஸ் ரிலீஸ் !
இயக்குநர் பா. ரஞ்சித் "தங்கலான் திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று சாகச கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக. சீயான் விக்ரம் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பை அளித்திருக்கிறார்.
விக்ரம் பிறந்த நாள்! ‘தங்கலான்’ க்ளிம்ப்ஸ் ரிலீஸ்!
இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவின் தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்டுடியோ க்ரீனும் இணைந்து, இந்திய சினிமாவின் தனித்துவமான நடிகரான சீயான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் மிகப் பிரபல இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ‘தங்கலான்’ படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.
இந்த நிலையில் சீயான் விக்ரமின் பிறந்த நாளான இன்று(ஏப்ரல் 17)அவரது ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு சிறப்பான விருந்தை அளித்துள்ளனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘தங்கலான்’ திரைப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதில் சீயான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை… பிரமிக்க வைக்கும் மாற்றத்தைக் கண்டு, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த காணொளி குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் “தங்கலான் திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று சாகச கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக. சீயான் விக்ரம் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பை அளித்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸ்- எங்கள் தயாரிப்பாளரான ஸ்டுடியோ க்ரீன் கே. ஈ. ஞானவேல் ராஜாவுடன் இணைந்திருப்பதால் நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை வழங்குகிறார். இப்படம் ஜியோ ஸ்டுடியோஸின் வலிமையான சர்வதேச திரைத் தொடர்புகளின் பின்னணியால் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் என நம்புகிறேன். விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்திற்காக அவர் மேற்கொண்ட கடின உழைப்பை வெளிப்படுத்தவும், அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியை போற்றவும், படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்கவும், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைக்கவும், இந்த காணொளியை வெளியிடுகிறோம். மேலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இந்த காணொளி அதிகரிக்கும் என்று நம்புகிறேன் ” என்றார்.
‘தங்கலான்’ படத்தில் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்புதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
1900 களின் முற்பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோலார் தங்க வயல்களின் ( கே.ஜி.எஃப்) பின்னணியில் அமைக்கப்பட்ட ‘தங்கலான்’- நிஜ வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அதன் அழுத்தமான கதையம்சத்துடன் பார்வையாளர்களை கவர தயாராகியுள்ள இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து தென்னிந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.
‘தங்கலான்’ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=W8R5u9lSqSI
மதுரை மாறன்.