அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அகமலை பகுதியில் நில உரிமை பட்டா வழங்க கோரி கிராம சபை கூட்டம்

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இந்திய அரசின் வன உரிமைச்சட்டம் 2006 அமல்படுத்தி, நில உரிமை பட்டா வழங்க கோரி கிராம சபை கூட்டம் , அகமலை பஞ்சாயத்து சுப்ரமணியபுரம் பகுதியில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், போடி தாலுகா, அகமலை பஞ்சாயத்து உட்கடை கிராமங்களான கரும்பாறை, சுப்ரமணியபுரம், கொத்தமல்லிகாடு, ஊரடி, ஊத்துக்காடு, பேச்சி அம்மன்சோலை, சின்னமுங்கில், பெரியமுங்கில், துருவம், குறவன்குழி ஆகிய வனப்பகுதிகளில்  பொது மக்கள் விவசாயம் செய்து குடியிருந்து வருகின்றனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இங்கு வாழும் பொதுமக்கள் அனைவரும் தினந்தோறும் 3 மணி நேரம் நடந்து சென்று வேலை செய்துவிட்டு மீண்டும் அங்கிருந்து 3 மணி நேரம் நடந்து  வனப்பகுதியில் வந்து விவசாயம் செய்கின்றனர்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

மேலும் இங்கு விளையக்கூடிய காபி, தேயிலை, மிளகு, வாழை, உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் குதிரைகள் மூலமே சோத்துப்பாறை மற்றும் அகமலை பகுதிக்கு கொண்டு வந்து அங்கிருந்து வாகனங்கள் மூலம் பெரியகுளம் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு  வருகின்றனர்.

HARINI JEWELLERS TRICHY

இங்கு வாழக்கூடிய பொது மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மின்சார வசதி மட்டும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கு வாகன வசதிகள் எதுவும் செல்லக்கூடாது என வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

எனவே இங்கு வாழக்கூடிய பொதுமக்கள் வன உரிமைச்சட்டம் 2006-இன் கிராம சபை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி நில உரிமைப்பட்டா பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

—  ஜெய்ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.