பிரபுதேவா & வைகைப்புயல் காம்போவின் ‘பேங்..பேங்’ ஷூட்டிங் நிறைவு!

 ‘கேஆர்ஜி’ கண்ணன் ரவி குரூப்பின் நான்காவது தயாரிப்பான ‘பேங் பேங்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபு தேவா-வைகைப்புயல் வடிவேலு இதில் கைகோர்த்து கலக்குகிறார்கள். ஜோம்பி வகை ஜானரில் ஆக்‌ஷன், ஹாரார், காமெடி என மூன்றும் கலந்த எண்டெர்டெய்னராக உருவாகியிருக்கும் இப்படத்தை சாம் ரோட்ரிக்ஸ் எழுதி இயக்கியுள்ளார். மலேசியா மற்றும் இந்தோனேஷியாவின் மவுண்ட் புரோமோ எரிமலைப் பகுதிகளிலும் சென்னையிலும் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

‘பேங் பேங்’-ன் ஒளிப்பதிவு : எச்.சி.வேணு, இசை : யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங் : ஆண்டனி, ஸ்டண்ட் : சுரேஷ், ஆர்ட் டைரக்டர் : டான் பாலா, சவுண்ட் மிக்ஸிங் : தெலுங்கானா மாநில அரசின் விருது பெற்ற அரவிந்த் மேனன், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

—  ஆண்டவர்   

Comments are closed, but trackbacks and pingbacks are open.