மருதுபாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதாக 70 வாகனங்களை பறிமுதல் செய்து அதிரடி காட்டியிருக்கிறார், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத்.
ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவை அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியாக நடத்தி முடிப்பதற்குள் போலீசாருக்கு பெரும் தலைவலியாகிவிடும் எனும் அளவுக்கு ஆர்வமிகுதியில் சிலர் செய்யும் செய்யும் அலப்பறைகள் அமைந்து விடுகின்றன.
Frontline hospital Trichy
அந்த நேரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் சிக்கலாகிவிடும். போலீசாரின் கண் முன்னாலேயே இந்த அலப்பறையா? என அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லியாக வேண்டிய நெருக்கடி. இந்த இக்கட்டான சூழலை மிக லாவகமாக கையாண்டு அதிரடி காட்டியிருக்கிறார் என்பதை சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியிருக்கிறார் எஸ்.பி. என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
விதியை மீறிய வாகனங்கள் (1)
அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..
3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy
விதிமீறிய வாகனங்களை அடையாளம் கண்டு, 6 தனிப்படைகள் அமைத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வாகனங்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள். வாகனங்களை அதிவேகமாக இயக்குதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, 63 வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ்சை தற்காலிகமாக ரத்து செய்யுமாறும் அந்தந்த வட்டார போக்குவரத்து கழகத்திற்கும் பரிந்துரை அனுப்பியிருக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை “FOLLOW TRAFFIC RULES” என்ற ஆங்கில வாசக வடிவில் நிறுத்தி வைத்து, அதன்வழியே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
எதிர்காலத்தில் ஜெயந்தி விழாக்களில் அலப்பறை செய்யாமல் அமைதியான முறையில் பங்கேற்று திரும்ப வேண்டும் என்பதை தமது அமைப்பு உறுப்பினர்களுக்கு அதன் தலைவர்கள் அன்புக்கட்டளை இட்டாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கிவிட்டது, இந்த சம்பவம்!
போலீஸ் விழிப்புணர்வு
ஷாகுல்
படங்கள் – ஆனந்த்
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche