உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் ஆய்வு !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நென்மேனி உள்வட்டம், சிறுகுளம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று (16.09.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.
சுமார் ஒரு மணிநேரம் பயனாளிகளிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரைத்தார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் திமுக ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், நகர மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் வருவாய் வட்டாட்சியர், ராஜாமணி மற்றும் தனி வட்டாட்சியர், வழங்கல் அலுவலர், நில அளவையர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

   —    மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.