ஜோரா வருவீங்கனு ஜோசியரே சொல்லிட்டாரு !

த.வெ.க. தலைமையிலான விஜய் ஆட்சிக்கு இது தலை தீபாவளி. அதிமுகவிலிருந்து த.வெ.க.வில் தஞ்சமடைந்த, மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன் வழக்கம் போல தனது பாணியில் ஏரியாவை அலறவிட்டிருக்கிறாராம். திருமங்கலம் தொகுதி முழுக்க த.வெ.க. தொண்டர்கள் அனைவருக்கும் தீபாவளி அன்புப்பரிசாக சேலை – வேட்டி – பேண்ட் – சட்டை – வெடிபாக்ஸ் – ஸ்வீட்னு அதகளப்படுத்திவிட்டாராம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் வயிற்றில் புளியை கரைத்த கதையாக, த.வெ.க. ஆட்சியை தனக்கே உரிய பாணியில் லந்து பண்ணி கலாய்ச்சி தள்ளுகிறாராம். மதுரையின் 10 தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளை நியமிச்சவரால, திருமங்கலம் தொகுதியில் மட்டும் வெயிட்டான ஆளை போட முடியாம தவிக்கிறாராம். திருமங்கலம் டாக்டர் சரவணனின் பூர்வீகம். பிறந்து வளர்ந்ததும் இங்கேதான். அந்த தைரியத்தில்தான், திமுக சார்பில் முதன்முதலில் இதே தொகுதியில் போட்டியிடவும் செய்தார். அடுத்தடுத்து எந்தக் கட்சிக்கு அவர் மாறினாலும், திருமங்கலத்தை மட்டும் அவர் கைவிடவே இல்லையாம். இனி மாநகரில் இருந்தால் சோபிக்க முடியாது. புறநகரை கையில் எடு ஏறுமுகம்தான்னு ஜோசியரே சொல்லிட்டாராம். முதல்வர் விஜயே ஜோசியர் சொல்படி ஆட்சி நடத்தும்போது, நாமளும் அதே வழியில் பயணித்தால் என்ன, தப்புனு? களத்துல இறங்கிட்டாராம்.

—  ஷாகுல், படங்கள் : ஆனந்த்

Comments are closed, but trackbacks and pingbacks are open.