ஒரே படம், அய்ந்து டைரக்டர்கள், அய்ந்து காதல்கள்!
கன்னட சினிமாவைச் சேர்ந்த ‘ரித்தி சித்தி பிலிம்ஸ்’ ராஜு ஷெரேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வவ்வல்ஸ்’ என்ற படம் வருகிற 13-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. திலீப்குமார், சங்கீத், ஹேமந்த்குமார், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் ஆகிய அய்ந்து டைரக்டர்களின் அய்ந்து விதமான காதல் உணர்வுகளைச் சொல்லும் இப்படத்தில் யூகிசேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஸ்வநாதன், விஜயா ஸ்ரீ, ராஜ் அய்யப்பன் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ்: ஹரி உத்ரா.
படத்தின் ஒளிப்பதிவு : கீர்த்தன் பூஜாரி, இசை : சரவண சுப்பிரமணியம், எடிட்டிங் : ஹரிஷ் ஹொம்மே, ஆர்ட் டைரக்டர் : எம்.கே.மதி, பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ. அப்துல்நாசர்
‘வவ்வல்ஸ்’-ன் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் மார்ச்.03-ஆம் தேதி நடந்தது.
“பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்” என்றனர் ஆர்ட் டைரக்டரும் எடிட்டரும்.
“அய்ந்து டைரக்டர்களின் காதல் உணர்வுகளுக்கு ஏழு பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். காதலும் உயிரும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதைப் பேசுகிறது இப்படம்” என்றார் மியூசிக் டைரக்டர் சரவண சுப்பிரமணியம்.
‘காதலின் ஒரு உணர்வு தான் படம் முழுக்க இருக்கும்படியான சினிமா வந்துள்ளது. ஆனால் இதில் அய்ந்து விதமான உணர்வுகளை அய்ந்து பேரின் பார்வையில் பதிவு செய்திருக்கோம். எங்களுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ராஜு சாருக்கும் இதில் நடிக்க ஒப்புக் கொண்ட சீனியர் நடிகர்களான யூகி சேது சார், சின்னி ஜெயந்த் சார், படத்தை தியேட்டரில் ரிலீஸ் பண்ணும் யோசனையைச் சொல்லி அதை செயல்படுத்திய ஹரி உத்ரா சாருக்கும் நன்றி” என ஒரே கருத்தை அய்ந்து டைரக்டர்களும் அழுத்தமாக பதிவு செய்தனர்.
படத்தில் நடித்த அய்ந்து நாயகிகளும் தங்களுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் டைரக்டர்களுக்கும் நன்றி சொன்னார்கள்.
சின்னி ஜெயந்த் பேசும் போது, “தமிழ்நாட்டை நம்பி கர்நாடகாவிலிருந்து வந்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் ஆதரிப்பார்கள். அய்ந்து டைரக்டர்களும் ஒற்றுமையாக இருந்தது ரொம்பவும் ஆச்சர்யம்” என்றார்.
யூகி சேது, “அய்ந்து குறும்படங்கள் சேர்ந்து பெரும்படமாகியிருக்கு. லவ்வைப் பத்தி இப்படத்தில் நிறைய பேசியிருக்கோம். படம் பாருங்க, எஞ்சாய் பண்ணுங்க”.
ஹரி உத்ரா, “வன்முறைப் படங்களும் அடல்ட் ஒன்லி படங்களும் வந்துக்கிட்டிருக்கும் இந்த நேரத்தில் ஜென் ஜி தலைமுறைக்காக இப்படம் வந்துள்ளது. இந்தப் பட புரமோஷனுக்கு உதவிய சுரேஷ் சந்திரா சாருக்கும் அப்துல்நாசர் சாருக்கும் நன்றி”.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.