வக்ஃபு சொத்துகளும் கிரிமினல் கும்பல்களும்  : இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குமா அரசு ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நெல்லையை சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளரும் முத்தவல்லியுமான ஜாஹிர் உசேன் படுகொலை, தமிழகம் முழுவதிலும் வக்ஃபு நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரத்தின் தீவிரத்தன்மையை உணர்த்தியிருக்கிறது.

ஜாஹிர் உசேன்
ஜாஹிர் உசேன்

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

தமிழகம் முழுவதுமுள்ள வக்ஃபு சொத்துக்களை பாதுகாத்து பராமரிக்கும் நோக்கில், வக்ஃபு வாரியம் என்றொரு சுயேட்சையான கட்டமைப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழகத்தில், வக்ஃபு வாரியத்தின் தலைவரின் தலைமையில், முதன்மை செயல் அலுவலரையும் அவருக்கும் கீழாக 11 மண்டலங்களில் மண்டல வக்ஃபு கண்காணிப்பாளர்களையும் கொண்ட அமைப்பாக இயங்கி வருகிறது.

தற்போது ஜனாப்.கே. நவாஸ்கனி, எம்.பி. வாரியத்தின் தலைவராக இருக்கிறார். ஜனாப். டாக்டர். தாரேஸ் அஹமது ஐ.ஏ.எஸ்.  முதன்மை செயலராக இருக்கிறார். அவரையும் உள்ளடக்கி 12 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக இயங்கி வருகிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கே நவாஸ்கனி MP
கே நவாஸ்கனி MP

தமிழகத்தில், மதசிறுபான்மையினரின் உணர்வுகளுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்து, இசுலாமியர்களை மட்டுமே பிரதிநிதிகளாக கொண்ட வக்ஃபு வாரியங்களை சுயேட்சையான அமைப்பாக செயல்படுத்தி வரும் நிலையில், வக்ஃபு வாரிய சொத்துக்களை அபகரிக்கும் நோக்கிலும் அதன் உரிமையில் தலையிடும் நோக்கிலும் ஒன்றிய அரசு திருத்தங்களை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

இந்த பின்புலத்தில்தான், முத்த வலிகளுக்குள்ளாகவே பிரிவினையையும் மோதலையும் உருவாக்குவது; போலியான ஆவணங்களை உருவாக்கிக் கொண்டு சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பது; வக்ஃபு வாரியத்தில் உறுப்பினர்களாக, அதிகாரத்தில் இருப்பவர்களை சரிகட்டி அவர்களின் துணையோடு சொத்துக்களை கைப்பற்றுவது என வக்ஃபு சொத்துக்களை கைப்பற்றுவதற்கான முயற்சி நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது.

வக்ஃபு வாரியம்
வக்ஃபு வாரியம்

அண்ணன் – தம்பிக்கிடையிலான சொத்து பிரச்சினையாகட்டும்; பங்காளிகளுக்கிடையிலான வாய்க்கால் வரப்பு சிக்கல்களாகட்டும் தீராத சிக்கல்களாக, மோதல்களாக, நீதிமன்ற வழக்குகளாக, பல நேரங்களில் கைகலப்பாக, சில நேரங்களில் கொலைகளாக எப்படி மாறிவிடுகிறதோ, அதுபோலவே, வக்ஃபு சொத்துக்களை கைப்பற்றுவதிலும் அதனை அனுபவிக்கத் துடிப்பதிலும் போட்டியும் பொறாமைகளும் சூழ்ச்சிகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வக்ஃபு-க்கு சொந்தமான ஒரு அங்குலம் மண்ணையும் யார் ஒருவரும் முறைகேடான முறையில் அனுபவிக்கவோ அல்லது மோசடியான முறையில் உரிமை மாற்றமோ செய்ய முடியாத அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பு முறைகளையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே சாமானிய இசுலாமியர்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

வக்ஃபு வாரியம் கூடவே, வக்ஃபு சொத்துக்களை மோசடியான முறையில் கைப்பற்றத்துடிக்கும் அதற்காக கொலையும் செய்யத் துணியும் கிரிமினல் கும்பல்களை அடையாளம் கண்டு களையெடுக்கவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்காத வகையில் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது,  ஜாஹிர் உசேன் படுகொலை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.