தொடர்ந்து 4-வது முறையாக வார்டை கைப்பற்றிய திமுக வேட்பாளர்
-மெய்யறிவன்
திருச்சி மாநகராட்சி 58வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய கவிதா செல்வம் தொடர்ந்து மூன்றாவது முறையாக கவுன்சிலர் பதவியை வென்று இருக்கிறார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற மாமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் கவிதாவின் கணவர் செல்வம் வெற்றி பெற்று கவுன்சிலரானார்.
தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற வார்டு பெண்கள் வார்டாக மாற்றப்பட்டதை அடுத்து அங்கு செல்வத்தின் மனைவி கவிதா களமிறங்கி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2011, 2022 என மூன்று முறை போட்டியிட்டு வெற்றியை தக்கவைத்துக் கொண்டு வருகிறார் கவிதா செல்வம். நடந்து முடிந்து உள்ளாட்சி தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 3559 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்காக தேவைகளை பூர்த்தி செய்து நற்பெயர் பெற்றதன் வெளிப்பாடு இந்த தொடர் வெற்றிக்கு காரணமாகும்.