காமெடி நடிகர் டு அதிபர் – உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“இன்று உக்ரைன் தாக்கப்படலாம்; பல பகுதிகளை எதிரிகள் சூறையாடலாம். ஆனால், இங்குள்ள ஒரு சிறு குழந்தையை கூட அவர்களால் அடிபணிய வைக்க முடியாது. ஏனென்றால் உக்ரேனிய இனத்துக்கே அடிபணிந்து பழக்கமில்லை” என உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி பேசியது, ஒட்டுமொத்த உக்ரேனியர்களையும் கிளர்ந்தெழ செய்திருக்கிறது.

ஒருகாலத்தில் நாடக நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர் தான் இன்றைய உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி. வழக்கறிஞரான ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீது ரஷ்யா செலுத்தி வரும் ஆதிக்கத்தை கண்டு மனம் கொதித்து, 1995-ம் ஆண்டு ‘க்வார்ட்டல் 95’ என்ற குழுவை தனது நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். இந்தக் குழுவின் வேலையே, நாடு முழுவதும் பயணித்து உக்ரைனை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பது குறித்து பேசுவது தான். ஆனால் அவரது பேச்சை கேட்க ஆள் இல்லை.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

தனது குழுவை க்வார்ட்டல் நாடகக் குழுவாக மாற்றி, ஊர் ஊராக சென்று மேடை நாடகங்களை போட்டார். தொலைக்காட்சியில் நாடகமாக அதனை மெருகேற்றினார். நாடகங்களில் பிரதான நகைச்சுவை நடிகராக, தானே நடிக்கத் தொடங்கினார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை கண்ட ஜெலன்ஸ்கி. ‘சர்வண்ட் ஆப் தி பீப்பிள்’ என்ற பெயரில் கட்சி தொடங்கினார். ‘உக்ரைனுக்கு நல்லது செய்தால் ஆதரவு; ஆதிக்கம் செலுத்த நினைத்தால் எதிர்ப்பு’. இது ஒன்று மட்டுமே அவரது கட்சியின் கொள்கையாக இருந்தது. 2019 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உக்ரைன் அதிபராக பதவியேற்றார் ஜெலன்ஸ்கி.

உக்ரைனை நட்பு நாடாகவோ, முழு சுதந்திர நாடாகவோ பார்க்க விரும்பவில்லை ரஷ்யா. தனது ஆதிக்கத்தின் கீழ் உக்ரைன் இருக்க வேண்டும் என்பதே ரஷ்யா விரும்பியது. விளாடிமீர் ஜெலன்ஸ்கி எவ்வளவு முயன்றும், உக்ரைன் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியை ரஷ்யா கைவிட மறுத்தது. ஆகவே, ரஷ்யாவிடம் இருந்து சற்று விலகி நிற்பது தான் உக்ரைனுக்கு நல்லது என்ற முடிவுக்கு வந்தார் ஜெலன்ஸ்கி. அதே சமயத்தில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். அந்த நாடுகளின் நிதியுதவியை உக்ரைனின் வளர்ச்சிக்காக முதலீடு செய்தார். கல்வித்துறையையும், மருத்துவத்துறையையும் சர்வதேச தரத்துக்கு உயர்த்தினார். உக்ரைன் சீரான வளர்ச்சியை கண்டது. அடுத்து நேட்டோ கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள உக்ரைன் முயற்சித்தது ரஷ்ய அதிபர் புதினுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவே இன்றைய போர்..!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.