அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அவ்வளவு கேவலமான பக்கீகள் நாம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இன்றைய நம் குழந்தைகளுக்கு..ஆறாவது படிக்கையிலேயே IIT குறித்தும் அதற்கான JEE தேர்வு குறித்தும் அறிமுகம் இருக்கு.பத்தாம் வகுப்பை முடித்த கையோடு NEET கோச்சீங் மையம் வழியாக.மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெறவும் வாய்ப்புகள் இருக்கிறது.

உயர்கல்விக்கு அமெரிக்காவோ, அய்ரோப்பாவோ, ஆஸ்திரேலியாவோ போவதற்கும் அதற்கான பல்கலைக்கழக தேர்வுமுறைகள் குறித்த அறிவும் விசாலமாகவே இருக்கு. சம்பாதிக்கும் பணத்தில் தன் பெண்டு, தன் பிள்ளை, தான் உண்டு என்று சொகுசா வாழவும் அதற்காக ஷேர் மார்கெட் முதல் கமாடிட்டி வரை முதலீடுகள் தெரிந்திருக்கு.
பெருநகரங்களின் மால்களின் மல்டிப்பெளக்ஸ் திரையரங்கின் IMax ல் படம் பார்க்கவும்… ஆயிரம் ரூபாய்க்கி பாப்கார்ன் வாங்கவும், நண்பர்களோடு Popeyes ல் பொறித்த கோழி உள்ளிட்ட Junk உணவுகளை தின்று மகிழவும் இயலுகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஆனால்…ரயில்களில் கழிப்பறை தூய்மையை கவனமாக மேற்கொள்ளவோ…தின்று முடித்த சிப்ஸ் கவரை குப்பைத் தொட்டியில் போட்டிடவோ…கடந்து போகையில் சக மனிதர்களின் மீது நம் கால் கை பட்டுவிட்டால் மன்னிப்பு கேட்கவோ…தெரியவே இல்லை.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

எல்லாவற்றிற்கும் முரண்டு பிடிப்பதும், எந்நேரமும் கைபேசியில் ரீல்ஸ் பார்ப்பதும், கேம்ஸ் விளையாடுவதும், பேரிரைச்சலோடு பாட்டுகளை கேட்பதுமாக…நையா பைசாசிற்கும் பொது ஒழுக்கம் அற்று வளர்கிறார்கள்.
எவ்வளவு ஆபத்தில் நம் குழந்தைகளை அபத்தமாக வழிநடத்துகிறோம் என்பதை அறியாமல் கடத்துகிறோம் ஒவ்வொரு நாளினையும்.

யாவரும் கேளீர்

குழந்தைகளை குறை சொல்ல ஏதுமில்லை. நாமும், நாம் அவர்களுக்காக உருவாக்கி வைத்திருக்கும் சூழலும், அவர்களுக்கு முன்மாதிரியாக நாம் நடந்துக் கொள்ளும் முறைகளில் தான் எல்லா சிக்கல்களும் இருக்கிறது.
கழிப்பறையில் வாசலில் நின்று சிறுநீர் கழித்துவிட்டு அப்படியே திரும்பி வர செய்யும் அம்மாவும்…
தின்று முடித்த லேஸ் பாக்கெட்டை கீழே போட்டு பக்கத்து இருக்கை பக்கம் தன் காலால் தள்ளி விட்டு பெருமிதம் கொள்ளும் அப்பாவும்…இதையெல்லாம் அமைதியாக கடந்திடும் மாண்புமிகு பொதுஜனமான நாமும் தான்…முதலில் திருந்த வேண்டியவர்கள்.

இல்லையெனில்…நம்மிடம் நிலவும் இந்த லட்சணத்துக்கு… நாம் நிலாவுக்கோ, செவ்வாய் கிரகத்திற்கோ போனால்கூட…குப்பை மேடுகளை தான் உருவாக்குவோமே தவிர ஒழுக்கம் நிறைந்த குடியானவர்களை அல்ல.
அவ்வளவு கேவலமான பக்கீகள் நாம்!

– *வளவன் வசந்தா சித்தார்த்தா*

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.