அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குழந்தையில்லா மனைவி கொலை ! கணவனுக்கு ஆயுள் தண்டனை!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அமையபுரம் பகுதியை சேர்ந்த மேரி 65/18 என்பவரின் மகள் விக்டோரியா 21/18 என்பவரை அதே பகுதியை சேர்ந்த மோசஸ் ஆரோக்கியராஜ் 29/18, த.பெ. ஜான் ஜோசப் என்பவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்ததாகவும் குழந்தையில்லாத காரணத்தால் விக்டோரியாவை அவரது மாமியார் அருள்மணி 61/25 மற்றும் அவரது மகன் மோசஸ் ஆரோக்கியராஜ் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாகவும்.

இந்நிலையில் கடந்த 07.12.2018-ம் தேதியன்று மேற்படி விக்டோரியா மயக்க நிலையில் கிடப்பதாக அவரது தாய் மேரிக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக விக்டோரியாவின் தாய் மேரி என்பவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது விக்டோரியா கழுத்தில் காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டதால், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக இறந்துபோன பெண்ணின் தாய் மேரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வையம்பட்டி காவல் நிலைய குற்ற எண். 253/18, U/s 174 (iii) Cr.PC (Marriage within 7 years) @ 302 IPC-ன் படி 07.12.2018 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கண்ட எதிரிகள் அருள்மணி மற்றம் மோசஸ் ஆரோக்கியராஜ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டது. இவ்வழக்கின் விசாரணை திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (III-ADJ) நடைபெற்று வந்தது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மோசஸ் ஆரோக்கியராஜ்
மோசஸ் ஆரோக்கியராஜ்

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆனந்தன். ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில்  (14.10.2025) திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணன்(III. ADJ) அவர்கள் எதிரி 2 மோசஸ் ஆரோக்கியராஜ் 29/18, த.பெ. ஜான் ஜோசப் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய், 5,000 அபராதமும் வழங்கியும். எதிரி 1 அருள்மணியை விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த வையம்பட்டி காவல் நிலைய நீதிமன்ற தலைமை பெண் காவலர் ரேவதி, என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், இகா.ப  வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.