குடும்ப தகராறில் மனைவி கொலை ! கணவனுக்கு ஆயுள் தண்டணை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட N.G.G.O. நகரில் கடந்த 25.08.2022 அன்று மாலை சிவா @ செல்வராஜ், 56/26, த/பெ மணி, N.G.G.O. நகர், தாந்தோணிமலை, கரூர் (Rowdy HS No.53/06 Thanthonimalai PS – Category ‘B’) என்பவர், தனது மனைவி சந்தியா @ சத்யா, 42/22, க/பெ செல்வராஜ், N.G.G.O. நகர், தாந்தோணிமலை, கரூர் ஆகியோருக்கிடையே, குடும்ப தகராறில், மேற்படி சிவா @ செல்வராஜ் என்பவர், தனது மனைவியை கத்தியால் குத்தி, கொலை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவா @ செல்வராஜ்
சிவா @ செல்வராஜ்

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவ்வழக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரணை முடிந்து  10.04.2026 அன்று மேற்படி சிவா @ செல்வராஜ் என்பவருக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2,000/- அபராதமும் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க மாண்பமை நீதிபதி.தங்கவேல்  உத்திரவிட்டுள்ளார். மேற்படி குற்றவாளி  (10.04.2026) திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கை சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த ஓம் பிரகாஷ், முன்னாள் காவல் ஆய்வாளர், தாந்தோணிமலை காவல் நிலையம், கரூர் மாவட்டம் (தற்போது துறையூர் காவல் நிலையம், திருச்சி மாவட்டம்) மற்றும் தற்போதைய விசாரணை அதிகாரி கே.எஸ்.செல்வகுமார், ஆய்வாளர், தாந்தோணிமலை காவல் நிலையம் மற்றும் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் ஜி. வீரமணி ஆகியோர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரண் பிரசாத் IPS வெகுவாக பாராட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.