திருச்சியில் கண்காணிப்பு இல்லாத கட்டுப்பாட்டு அறை கண்டுக்கொள்வாரா காவல் ஆணையர்
திருச்சியில் கண்காணிப்பு இல்லாத கட்டுப்பாட்டு அறை கண்டுக்கொள்வாரா காவல் ஆணையர்…
திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்திற்கு ஈடாக பேருந்துகள் வசதியும் மக்கள் நடமாட்டமும் பெருகிக்காணப்படும் பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம். ஒருநாளைக்கு சராசரியாக ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் பகுதியாக இருந்து வருகிறது. பல உயர்தர கடைகளும் அமையப்பெற்றுள்ள பகுதியாகவும் இருந்து வருகிறது.
சமீபத்தில் தமிழகத்தை அதிரவைத்த செய்தி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள லலிதா ஜீவல்லரி கொள்ளை சம்பவம் தான்… இந்த சம்பவத்தில் இதுவரைக்கும் காவல்துறைக்கு பெரும் குழப்பமாகவும், ஒரு டூர்ஸ்டாகவும் இருந்த விஷயம் கொள்ளையடிக்க வந்த நபர்கள் எந்த வழியே வந்தனர், எப்படி சென்றனர் என்பது தான். இதற்க்கு இது வரைக்கும் காவல் துறையில் பதில் இல்லை . ஏனென்றால் சத்திரம் பேரூந்து நிலையம் புதிதாக சீரமைத்து கொண்டிருப்பதால் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த கேமராக்கள் கொள்ளை சம்பவத்தின் போது செயல்படாமல் துண்டிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனை எல்லாம் அறிந்த கொள்ளை கும்பல் தனது வேலையை காட்டியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு பிறகு மாநகரை எந்நேரமும் அலார்ட்டாக இருக்க அன்றைய மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கண்கண்ணிப்பு கேமராக்களை பல முக்கிய பகுதிகளில் அமைக்க உத்தரவிட்டார். அதன் மூலம் ஸ்ரீரங்கம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவையனைத்தையும் கண்காணிக்க கண்காணிப்பு அறையும் துவங்கப்பட்டது. மேலும் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு அறைகளில் எந்நேரமும் மாநகர செயல்பாடுகளை கவனிக்க காவலர்கள் அமைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் திருச்சி கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு அறையானது தற்காலிகமாக வாட்டர் டேங் மேலே அறை எண் 17 -இல் வைக்கப்பட்டுள்ளது . ஆனால் அங்கு கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க காவலர்கள் இருப்பதில்லை என்றும், எந்நேரமும் பூட்டியே கிடக்கிறது.
மாநகருக்குள் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களை குறைக்கவும் காவல் துறையின் மூலம் தொடங்கப்பட்ட கண்காணிப்பு அறை யாரும் கண்டுக்கொள்ளாமல் தூங்கிக்கொண்டிருப்பது பெரும் வருத்தத்தை அளிப்பதுடன், குற்றங்கள் பெருகுவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
இதற்கு மாநகர காவல் ஆணையர் முற்றுப்புள்ளி வைப்பாரா..!!