நியோமேக்ஸ் மோசடி பற்றி பேசுவாரா, அண்ணாமலை ? பாஜக நிர்வாகி பகிரங்க கடிதம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ன்பு அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நீங்கள் தமிழ்நாடு BJP  கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பல்வேறு பணிகளில் தீவிரமாக பணியாற்றி கொண்டு இந்த திமுக அரசின் பல்வேறு தில்லுமுல்லுகளையும் அயோகித்தனத்தையும் தொடர்ந்து போராடி எதிர்த்துக்கொண்டு மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்த அளப்பரிய பணியை தமிழ்நாட்டில் இதுவரை பாரதிய ஜனதா கட்சியின் எந்த தலைவரும் செய்யவில்லை அதே நேரத்தில் எதிர்க்கட்சியாக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தங்களைப் போன்று ஆக்ரோஷமாக பணியை செய்தார் தங்களைப் போன்று என்று நான் ஏன் கூறுகிறேன் என்றால் அவர் ஆக்ரோஷமாக  ஒரு கருணாநிதி குடும்பத்தை மட்டும் தான் அவர் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

BJP Annamalai ஆனால்,  நீங்கள் கருணாநிதி குடும்பத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுக காரர்கள் எங்கு தவறு செய்தாலும் ஆட்சியாளர்கள் தவறு  செய்தாலும் உங்களால் முடிந்தவரை  ஒரு தனி ஒருவனாக அனைத்து விஷயங்களையும்  எதிர்த்துகொண்டு சென்றிருக்கிறீர்கள் இதில் ஒரு மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் பிரஸ் மீட் செய்து உடனடியாக அந்த பிரச்சனையை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஒரு தைரியமான மீடியாக்கள் கேட்கும் அனைத்து விதமான கேள்விகளையும் எதிர்கொள்ள கூடிய  புத்திசாலித்தனத்தையும், தைரியத்தையும் ஆண்டவன் உங்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளார். அதுவும் அதனை சிறப்பட பயன்படுத்தி இன்று மக்களை காக்கும் காவலனாக இருக்கிறீர்கள்  இது உண்மையிலேயே நமது சித்தாந்தத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சியினர்கள்  கூட உங்கள்  மீது ஒரு தனி ஒரு மரியாதை உண்டு நிச்சயம் உங்களுக்கு வெற்றி உண்டு.

அதேபோல் நான் ஒரு பாரதிய ஜனதா கட்சியின் தங்கள் கீழ் பணி செய்யும் ஒரு கட்சிப் பொறுப்பில் உள்ள மாவட்ட பொதுச் செயலாளர் நான் NEO MAX  நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்து ஏமாந்த நிலையில் உள்ளேன் இது எனது தனிப்பட்ட ஒரு பாதிப்பு என்றாலும் கூட இதில் Neomax  நிறுவனம் செய்த மோசடி என்பது கிட்டத்தட்ட 3 லட்சம் நபருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதுவரை தமிழ்நாட்டில் நடந்த ஆகப் பெரிய பொருளாதார குற்றம் பண  மோசடியை கூட எந்த ஒரு அரசியல் கட்சியும் பேசவில்லை எந்த ஒரு பத்திரிக்கையும் பேசவில்லை அங்குசத்தை தவிர  கிட்டத்தட்ட 5000 கோடிக்கு மேற்பட்ட பண மோசடி இவற்றை நீங்கள் கண்டிப்பாக பேசவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து  இது போன்ற மிகப்பெரிய பிரச்சனையை கூட பேசவில்லை என்றால்   இதில் பாதிக்கப்பட்ட பலருக்கும் பணம் திரும்ப கிடைக்க இந்த அரசாங்கம் விறைந்த நிலைக்கு எடுக்காது  அவர்களுக்கு பணம் கிடைக்காமல் கடுமையான ஒரு சோதனையான காலகட்டத்தில் உள்ளார்கள்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பெரம்பலூர் ஜெயபால்
பெரம்பலூர் ஜெயபால்

இன்று நீங்கள் சந்திக்கும்  திமுக அரசின் கொலை கொள்ளை இது எல்லாம் ஆங்காங்கே  தினமும் ஒன்று இரண்டு நடக்கின்ற ஒரு மோசமான ஆட்சியை அவர்களை காண்பிக்கிறது ஆனால் வெளியே தெரியாமல் இந்த NEOMAX  இல் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் ப்ராப்பர்ட்டிகளையும் மிரட்டி அதில் உள்ள முக்கிய சொத்துக்களை கையகப்படுத்திக் கொண்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்துக் கொண்டு ஒன்றை ஆண்டு காலமாக  இப்போது வரை கம்ப்ளைன்ட் பெரும் இடத்திலேயே உள்ளார்கள் ஆனால் இதில்  அடிப்படை செலவுகள் பார்க்க முடியாமல் பணி ஓய்வு பெற்று பணத்தை முதலீடு செய்து இப்பொழுது மருத்துவ செலவு கல்வி செலவு என தங்களது அத்தியாவசிய செலவுகூட  செய்ய முடியாமல் போராடிக் கொண்டும் மானத்தை இழந்தும்ந்தும் உயிரை இழந்தும் இன்னும் பல பேர் கொடுமையாக பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதில் கோர்ட் விரைந்து  நடவடிக்கை எடுத்தாலும் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் வருவாய்த்துறை  இதிலிருந்து அவ்வளவு எளிதில் இவர்களைவிட பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு ஒத்துழைப்பு செய்வதாக தெரியவில்லை திமுக அமைச்சர்களும் திமுக முதல்வர் மருமகன் அனைவரும் இதில் தலையிட்டு இந்த கம்பெனியை முடக்கி நிறுவனத்தின் முக்கிய சொத்துக்களை அதன் இயக்குனர்களையும் அதன் நிர்வாகிகளையும் மிரட்டியும் அதனை தங்களுக்கு கையகப்படுத்திக் கொண்டுள்ளார்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணம் கொண்டு கொடுக்க முடியாத சூழல் ஏற்படும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்க விடாமல் அனைத்து பணிகளையும் செய்து கொண்டுள்ளார்கள் எனவே இதில் தாங்கள் உள்ளே வந்து இந்தப் பிரச்சினையை கையில் எடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு லட்சம் நபர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும் இதில் முக்கியமாக நமது கட்சியில் புதிதாக இணைந்திருக்கும் திரு வீரசக்தி திருச்சியை சார்ந்தவர் இதில் மூளை யாகவும் செயல்பட்டுள்ளார் இதை நீங்கள் கருத்தில் கொள்ளாமல் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்.

எந்த அரசியல் கட்சியும் இறுதியில் குரல் கொடுக்கவோ எந்த பத்திரிக்கையும் குரல் கொடுக்கவோ இல்லை குறிப்பாக வார இதழான அங்குசம் மட்டுமே இதனை பேசுகின்றது மற்ற எந்த ஒரு செய்தி நிறுவனமோ பத்திரிக்கையை இதனை பற்றி பேசுவதே இல்லை அந்த அளவுக்கு பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்கள் இந்த NEOMAX  பணத்தை கொள்ளை அடித்த முன்னணி இயக்குனர்களும் நிர்வாகிகளும் தங்களது பெயர் மற்றும் பினாமி பெயர்களில் சொத்துக்களை குவித்து கொண்டு சுகபோகமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

எனவே தாங்கள் இதில் தலையிட்டு இதனை கேள்வி கேட்கும் பட்சத்திலேயே அனைவருக்கும் உடனடி தீர்வு என்பது கிடைக்கும் இல்லையெனில் பல மக்கள் இங்கு உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடிய நிலைமையில் தான் உள்ளார்கள் வங்கி கடன் கட்ட முடியாமல் வாங்கிய இடத்தில் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் என பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் அவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளார் என்பதே  உண்மை எனவே அன்பு அண்ணன் அவர்கள் இதில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உதவி செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

 

இப்படிக்கு

 ஜெயபால்,

 மாவட்ட பொதுச் செயலாளர் பெரம்பலூர் மாவட்டம்.

9489630358

அலைபேசியில் கால் செய்தும் என்னால் உங்களையும்  தொடர்பு கொள்ள முடியவில்லை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.